தென்மேற்கு பருவக்காற்று காரணமாக கோவை, நீலகிரி மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!: வானிலை மையம் தகவல்

சென்னை: தென்மேற்கு பருவக்காற்று காரணமாக கோயம்புத்தூர், நீலகிரி மாவட்டங்களில் இன்றும், நாளையும் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கோவை, நீலகிரி நீங்கலாக ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலை நிலவக்கூடும் என்றும் சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் அதிகபட்ச வெப்பநிலை 36  டிகிரியாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரியாகவும் பதிவாகும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதேபோன்று மன்னார் வளைகுடா பகுதிகளில் மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு எச்சரிக்கையுடன் செல்ல வேண்டும் என்றும் வடக்கு வங்கக்கடல் பகுதிகளில் மணிக்கு 45 முதல் 55, 65 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள்.

Related Stories:

>