பெட்ரோல், டீசல் விலையை குறைப்போம்: பாஜ தலைவர் உறுதி

சென்னை: தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை விமான நிலையத்தில் நேற்று அளித்தபேட்டி: திமுக தேர்தல் வாக்குறுதியில் கொடுத்த பெட்ரோல், டீசல் விலை குறைப்பு நிறைவேற்றாததால் அதிமுகவினர் மாநிலம் முழுவதும் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.  அவர்களின் போராட்டங்கள் வெற்றி பெற வேண்டும். ஆட்சிக்கு வந்து 75 நாட்கள் கடந்தும் முழுமையாக ஒரு கோரிக்கையையும் திமுக நிறைவேற்றவில்லை. பெட்ரோல், டீசல் விலையில் இருந்து நீட்தேர்வு வரை அனைத்தையும் கூறிவிட்டு தற்போது அதற்கெல்லாம் ஒரு காரணத்தைச்சொல்லி வருகின்றனர்.

டீசல் விலையை குறைக்க மத்திய அரசு அனைத்து முயற்சிகளையும் எடுத்து வருகிறது. பெட்ரோல், டீசல் விலை அதிகரிப்பை பாஜவும் ஏற்கவில்லை. அதை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தமிழக நிதியமைச்சர் டீசலை ஜிஎஸ்டிக்குள் கொண்டு வருவதை முதலில் ஏற்க வேண்டும். அதற்குப்பிறகு பார்க்கலாம். மத்திய அரசு சொன்னதுபோல் முயற்சி எடுத்து பெட்ரோல், டீசல் விலையை குறைப்போம் என்றார்.

Related Stories:

>