‘மாஸ்டர் செப் தமிழ்’ சமையல் நிகழ்ச்சி சன் டிவியில் ஆக.7 முதல் ஒளிபரப்பு: சனி, ஞாயிறு இரவு 9.30 மணி முதல் 10.30 மணி வரை நடக்கிறது

சென்னை: சன் டிவியில், ஆகஸ்ட் 7ம் தேதி முதல் ஒளிபரப்பாக உள்ள சர்வதேச சமையல் நிகழ்ச்சியான ‘மாஸ்டர் செப் தமிழ்’ நிகழ்ச்சியை நடிகர் விஜய்சேதுபதி தொகுத்து வழங்குகிறார்.  இந்த நிகழ்ச்சியின் தொடக்க விழா, சென்னை கிண்டியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நேற்று நடந்தது. இந்நிகழ்ச்சியில் சன் டிவி நெட்வொர்க், தயாரிப்பாளர்கள் இன்னோவேடிவ் பிலிம் அகாடமி, எண்டேமல் ஷைன் இந்தியா மற்றும் நிகழ்ச்சியின் டைட்டில் ஸ்பான்சர் பட்டர்பிளை ஹோம் அப்ளைன்ஸ், இணை ஸ்பான்சர்கள் சக்தி மசாலா, டேஸ்டி டேஸ்டி, உதய் கிருஷ்ணா நெய், ஸ்பெஷல் பார்ட்னர்ஸ் சங்கீதா மொபைல்ஸ், வேல்ஸ் பல்கலைக்கழகம், அனில் புட்ஸ், இன்வெனியோ ஆர்ஜின் நிறுவனத்தின் நிர்வாகிகள் பங்கேற்றனர்.

அப்போது அவர்கள் கூறியதாவது:

சர்வதேச அளவில் மிகவும் பிரபலமான மாஸ்டர் செப் எனும் சமையல் கலை நிகழ்ச்சி, முதல் முறையாக தமிழில் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக இருக்கிறது. இதனை பிரபல நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்க உள்ளார். ஆகஸ்ட் 7ல் தொடங்கும் மாஸ்டர் செப் நிகழ்ச்சி - இன்னோவேடிவ் பிலிம் அகடமி தயாரிப்பில் அடுத்த 13 மாதங்களுக்கு சனி மற்றும் ஞாயிறுக்கிழமைகளில் இரவு 9.30 மணி முதல் 10.30 மணி வரை ஒளிபரப்பாக உள்ளது. பிரபல நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்க உள்ள மாஸ்டர் செப் நிகழ்ச்சியின் ப்ரோமோ வீடியோக்கள் தமிழ் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. வரும் 7ம் தேதி தமிழில் ஒளிப்பரப்பாக உள்ள முதல் நிகழ்ச்சிதான் ‘மாஸ்டர் செப்’ நிகழ்ச்சியின் 500வது எபிசோட் ஆகும்.

பிராந்திய மொழியில் ‘மாஸ்டர் செப் தமிழ்’தான் இந்த மைல்கல்லை எட்டுகிறது. ‘மாஸ்டர் செப்’ நிகழ்ச்சியை தமிழில் நடிகர் விஜய் சேதுபதியும், தெலுங்கில் நடிகை தமன்னாவும், மலையாளத்தில் நடிகர் பிருத்விராஜ் ஆகியோர் தொகுத்து வழங்க உள்ளனர்.  இவ்வாறு அவர்கள் கூறினர்.  இதுகுறித்து நிகழ்ச்சியின் தயாரிப்பாளர்கள் இன்னோவேடிவ் பிலிம் அகாடமி சரவண பிரசாத், எண்டேமல் ஷைன் இந்தியா அபிஷேக் ரெகி,பட்டர்பிளை ஹோம் அப்ளைன்ஸ் கார்த்திகேயன், வேல்ஸ் குழும தலைவர் ஐசரி கணேஷ், சன் டிவி நெட்வொர்க் புரோகிராமிங் தலைவர் கிளமன்ட் ஆகியோர் கூறுகையில், ‘‘மாஸ்டர் செப் நிகழ்ச்சியின் 500வது எபிசோட், மாஸ்டர் செப் தமிழின் முதல் எபிசோடாக உள்ளது பெருமையாக உள்ளது’’ என்றனர்.

Related Stories: