வயல்வெளியில் கிடந்த மர்ம பொருளால் பரபரப்பு

சென்னை: திருக்கழுக்குன்றத்தில் வயல்வெளியில் கிடந்த மர்ம பொருளால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர், அது அரக்கோணம் ராஜாளி கடற்படையினரிடம் நேற்று ஒப்படைக்கப்பட்டது. திருக்கழுக்குன்றம் அடுத்த வடக்குப்பட்டு என்ற பகுதியில் உள்ள வயல்வெளிப் பகுதியில் நேற்று முன்தினம், மண்ணில் புதைந்த நிலையில், மர்ம பொருள் ஒன்று காணப்பட்டது. இதை பார்த்த அவ்வழியாக வந்த விவசாயிகள் திருக்கழுக்குன்றம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் அங்கு சென்று ஆய்வு செய்து அதை திருக்கழுக்குன்றம் காவல் நிலையம் கொண்டு சென்று பாதுகாப்பாக வைத்திருந்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில் இந்த கருவி, இங்கு எப்படி வந்தது குறித்து விசாரணை நடந்து வருகிறது.

Related Stories:

>