133 வருடங்கள் பழமையான விக்டோரியா மஹால் ரூ28 கோடியில் புனரமைப்பு: சென்னை மாநகராட்சி திட்டம்

சென்னை: சென்னை சென்ட்ரலில் அமைந்துள்ள விக்டோரியா மஹால் 133 வருடங்கள் பழமையானது. பல ஆண்டுகளாக பராமரிப்பு இன்றியும், அரங்கின் உட்புற தடுப்புகள், தேக்குமர கதவுகள், படிகட்டுகள், பார்வையாளர் மாடம், மேல் தளம், சீன செராமிக் மேற்கூரை உட்பட அனைத்தும் சேதமடைந்தும் பாழடைந்தும் காணப்படுகின்றது. 1887ம் ஆண்டு திறக்கப்பட்ட அரங்கிற்கு இங்கிலாந்து மகாராணி விக்டோரியா பெயர் சூட்டப்பட்டது. சென்னையில் பல்வேறு பொது நிகழ்ச்சிகளை நடத்த, அரங்கம் தேவை என்பதை திட்டமிட்டு அப்போதைய சென்னையின் முக்கிய பிரமுகர்களால் சுமார் ரூ.16 ஆயிரம் நிதிதிரட்டி இந்த அரங்கம் கட்டிமுடிக்கப்பட்டது.

1968ல் அண்ணா முதலமைச்சராக இருந்தபோது விக்டோரியா அரங்கிற்கு நிதி ஒதுக்கி புதுப்பித்தார். தொடர்ந்து கருணாநிதி முதலமைச்சராக இருந்த போது 2009ல் அரங்கை புதுப்பிக்க நிதி ஒதுக்கினார். ஆனால் அதன் பின்னர் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு விக்டோரியா அரங்கு புதுப்பிக்கப்படாமல் கைவிடப்பட்டது. சென்னையின் புராதன கட்டிடங்களை தற்போது புனரமைக்கும் பணியை சென்னை மாநகராட்சி மேற்கொண்டு வரும் நிலையில் வரலாற்று சிறப்புமிக்க விக்டோரியா அரங்கை சுமார் ரூ.28 கோடி செலவில் பழமை மாறாமல் புதுப்பித்து, மியூசியம் அமைக்க சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.

Related Stories: