தகுதிப் போட்டியில் இலக்கை எட்டி உலகப்போட்டிக்கு தகுதி பெற்றும் குமரி வீராங்கனைக்கு வாய்ப்பு மறுப்பு: தமிழக அரசு நடவடிக்கை எடுக்க தாய் கண்ணீர் மல்க கோரிக்கை

கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த இளம் வீராங்கனை ஒருவர் காது கேளாதோருக்கான உலக தடகள ஷாம்பியன் போட்டியில் பங்குபெற தகுதி பெற்றும் செல்ல முடியாத நிலையில் தவிக்கிறார். ஆகிய இந்திய காது கேளாதோர் அலட்சியமே இதற்கு காரணம் என்று புகார் கூறியுள்ள வீராங்கனையின் தாயார் தமிழ்நாடு அரசு உதவி செய்ய வேண்டும் என்று கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளார். கன்னியாகுமரி மாவட்டம் கடையாலு மூடு பகுதியை சேர்ந்த ஏழை தம்பதியின் மகள் சமீஹா பர்வீன். இவருக்கு வயது 17. விளையாட்டில் எதையும் சாதிக்கும் ஆர்வம்.

இவர் இரண்டாம் வகுப்பு படிக்கும் போது காய்ச்சலால் பாதிக்கப்பட்டு ஒரு கட்டத்தில் பேச்சு மற்றும் கேட்கும் திறனை இழந்தார். இருப்பினும் விளையாட்டு ஆர்வம் குறையாத அவர்; பல்வேறு தடகள போட்டிகளில் பிரகாசிக்க தொடங்கினார். நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல் மற்றும் ஓட்டப்போட்டிகளில் ஏராளமான பதக்கங்களை வென்றதுடன் தேசிய காது தேளாதோர் தடகள போட்டியில் தொடர்ந்து தங்க பதக்கங்களை குவித்ததால் கடந்த ஆண்டு உலகப்போட்டிக்கு தேர்வானார். ஆனால் கொரோனா பேரிடர் காரணமாக பங்கேற்க முடியாத ஏமாற்றத்திற்கு ஆளான சமீஹாவிற்கு போலந்தில் அடுத்த மாதம் நடைபெறும் 4-வது உலக தடகள போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்தது.

இதற்காக டெல்லியில் நடைபெற்ற தகுதி போட்டியிலும் சமீஹா பர்வீன் பங்கேற்றார்.நீளம் தாண்டுதலில் தேவையான இலக்கிற்கும் மேலாக சமீஹா தாண்டியுள்ளார். இருப்பினும் வேறு பெண்கள் யாரும் காது கேளாதோருக்கான உலக சாம்பியன் போட்டிக்கு தேர்வாகாததால் அவரை போலந்து அழைத்து செல்ல அகில இந்திய சம்மேளனம் மறுப்பதாக சமீஹாவின் தாயார் புகார் கூறியுள்ளார். வாய் பேச முடியாத இந்த சிறுமியின் விளையாட்டு திறமைக்கு நியாயம் கேட்கும் சமீஹாவின் தாய் சலாமத் தமிழ்நாடு அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

ஒரு பக்கம் ஒலிம்பிக் போன்ற பதக்கங்களுக்காக போராடும் இந்தியா, சமீஹா போன்ற வாய் பேச முடியாத வீரர், வீராங்கனைகளின் திறமைகளை ஊக்குவிக்க மறுப்பது ஏன் என்பதே விளையாட்டு ஆர்வலர்களின் ஒட்டுமொத்த கேள்வி?.

Related Stories: