வேலூர் பார்ஸ்டர் பள்ளியில் பதுக்கி கைதிகளுக்கு கஞ்சா சப்ளை ஏட்டு உள்பட 3 பேர் சஸ்பெண்ட்

வேலூர்: வேலூர் பார்ஸ்டல் பள்ளியில் கஞ்சா பதுக்கி கைதிகளுக்கு சப்ளை செய்த ஏட்டு உட்பட 3 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். வேலூர் மத்திய சிறைச்சாலை எதிரே 18 வயது முதல் 21 வயதுக்கு உட்பட்ட குற்றவாளிகளை அடைக்கும் பார்ஸ்டல் பள்ளி உள்ளது. கொரோனா பரவல் காரணமாக இங்கு விசாரணை கைதிகள் அடைக்கப்பட்டு 10 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டு, அதன்பிறகு மத்திய சிறைக்கு மாற்றப்படுகின்றனர். இந்நிலையில் சிறை கண்காணிப்பாளர் ருக்மணி பிரியதர்ஷினி நேற்று முன்தினம் வேலூர் மத்திய சிறை மற்றும் பார்ஸ்டல் பள்ளியில் அதிரடி ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது பார்ஸ்டல் பள்ளியில் ஒரு அறையில் பதுக்கி வைத்திருந்த 50 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த சிறைக்காவலர்களிடம், கண்காணிப்பாளர் ருக்மணி பிரியதர்ஷினி விசாரணை நடத்தினார். அப்போது, கஞ்சாவை பதுக்கி வைத்து கைதிகளுக்கு சப்ளை செய்தது தெரியவந்தது. இதையடுத்து ஏட்டு இளையராஜா, முதல்நிலை காவலர் செல்வகுமார், வார்டன் அஜித்குமார் ஆகிய 3 பேரை சஸ்பெண்ட் செய்து சிறை கண்காணிப்பாளர் ருக்மணி பிரியதர்ஷினி நேற்று உத்தரவிட்டார்.

Related Stories: