கமல்ஹாசன் தலைமையில் கவிஞர் சினேகன், நடிகை கன்னிகா காதல் திருமணம்

சென்னை: கவிஞரும், மக்கள் நீதி மய்ய மாநில இளைஞர் அணி செயலாளருமான சினேகனுக்கும், நடிகை கன்னிகா ரவிக்கும் திருமணம் உறுதி செய்யப்பட்டுள்ளது. ‘தேவராட்டம்’ என்ற படத்திலும் மற்றும் டி.வி தொடரிலும் கன்னிகா ரவி நடித்துள்ளார். இருவரும் 8 வருடங்களாக காதலித்து வந்ததை அறிந்த இருவீட்டு பெற்றோரும் அவர்கள் திருமணத்துக்கு சம்மதித்தனர். இதையடுத்து வரும் 29ம் ேததி காலை 10.45 மணியளவில், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தலைமையில் சினேகன், கன்னிகா ரவி திருமணம் சீர்திருத்த முறைப்படி நடக்கிறது.

Related Stories: