கமலுடன் சமூக நீதி கூட்டமைப்பு நிர்வாகிகள் சந்திப்பு

சென்னை:  நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சி தலை வருமான கமல் ஹாசனை சமூக நீதி கூட்ட மைப்பை சேர்ந்த நிர்வாகிகள் சந்தித்து முக்கிய விஷயங்கள் குறித்து பேசினர். இதுகுறித்து மக்கள் நீதி மய்யம் நேற்று வெளியிட்ட அறிக்கையில், ‘மநீம தலைவர் கமல்ஹாசனை சமூக நீதி கூட்டமைப்பை சேர்ந்த சமுதாய தலைவர்கள் சந்தித்தனர். மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகத்திற்கான 20 சதவிகித இடஒதுக்கீட்டில், வன்னியர் சமூகத்திற்கு 10.5 சதவிகிதம் ஒதுக்கப்பட்டதால் தாங்கள் பாதிக்கப்படுவதாக கூறினர். அவர்கள் உணர்வுகளை புரிந்துகொள்வதாகவும், விரைவில் நல்ல முடிவுகள் எடுப்போம் என்றும் கமல்ஹாசன் கூறினார்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories:

>