தமிழகத்தின் 34 மாவட்டங்களில் 100க்கும் கீழ் கொரோனா பாதிப்பு: சென்னையில் உயிரிழப்பு ஏதுமில்லை

சென்னை: தமிழக சுகாதாரத்துறை நேற்று வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் நேற்று 1,35,008 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 1,830 பேருக்கு தொற்று  உறுதி செய்யப்பட்டுள்ளது.  இதுவரை 24,86,192 பேர்  குணமடைந்துள்ளனர்.  மேலும் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 24 பேர் நேற்று உயிரிழந்தனர். இதுவரை  மொத்தம் 33,862 பேர் உயிரிழந்துள்ளனர்.

சென்னையில் நேற்று உயிரிழப்பு ஏதும் இல்லை, அதிகபட்சமாக கோவையில் 4 பேர், புதுக்கோட்டையில் 3 பேர், மயிலாடுதுறை, பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களில் தலா 2 பேர் உயிரிழந்தனர். நேற்றைய மொத்த பாதிப்பில்  சென்னையில் 130 பேர், கோவையில் 177 பேர், ஈரோட்டில் 135 பேர், சேலத்தில் 110 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மற்ற மாவட்டங்களில் தொற்று பாதிப்பு 100க்கும்  கீழ் குறைந்துள்ளது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related Stories:

>