வண்டலூர் பூங்காவில் உள்ள சிங்கங்களுக்கு கொரோனா இல்லை

சென்னை: வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல்  பூங்காவின் துணை இயக்குநர் வெளியிட்டுள்ள அறிக்கை: வண்டலூர் உயிரியல் பூங்காவில் உள்ள  3 சிங்கங்களின்  மாதிரிகள் கொரோனா மறு ஆய்வுக்காக கடந்த 9ம் தேதி தேசிய உயர் பாதுகாப்பு விலங்கு நோய்கள் ஆய்வு நிறுவனத்திற்கு அனுப்பப்பட்டது. அதில்,  நெகட்டிவ் என முடிவு வந்தது. மேலும் 5 சிங்கங்களின் மாதிரிகள் கடந்த 17ம் தேதி அனுப்பப்பட்டது. அதுவும் நெகட்டிவ்.

உயிரியல் பூங்காவில் உள்ள 13 சிங்கங்களுக்கு பரிசோதனை செய்ததில் கொரோனா தொற்று இல்லை என தெரியவந்துள்ளது. அனைத்து சிங்கங்களும்  நல்ல நிலையில் உள்ளன. இருந்தபோதிலும் வைரஸ் பரவுவதை கருத்தில் கொண்டு சிங்கங்களின் உடல்நிலை கண்காணிக்கப்பட்டு வருகிறது.

Related Stories: