பிரதமர் மோடிக்கு சேலை அனுப்பி காங்கிரசார் போராட்டம்.. மோடி அரசு ராஜினாமா செய்ய வேண்டும் என தொடர் முழக்கம்!!

சென்னை : பெகாசஸ் ஒட்டுகேட்பு பிரச்சனையில் மோடி அரசு பதவி விலக வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி வலியுறுத்தி உள்ளது. அரசியல் கட்சி தலைவர்கள், பத்திரிகையாளர்கள் உளவு பார்க்கப்பட்ட விவாகரத்திற்கு கண்டனம் தெரிவித்து நாடு முழுவதும் ஆளுநர் மாளிகை முன்பு காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். சென்னையில் சின்னமலையில் திரண்ட காங்கிரஸ் கட்சியினர், பிரதமர் மோடிக்கு சேலை அனுப்பும் போராட்டம் நடத்தினர்.

ஆர்ப்பாட்டத்தில் மாநில காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். தொடர்ந்து ஆளுநர் மாளிகை நோக்கி புறப்பட்ட காங்கிரஸ் கட்சியினரை போலீஸ் தடுத்து நிறுத்தியதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. ஆளுநரை சந்திக்க அனுமதி வேண்டும் என்று அவர்கள் முழக்கமிட்டனர்.

அந்த பேரணி முடிந்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய கே.எஸ்.அழகிரி, உளவு பார்க்க அனுமதித்ததன் மூலம் ஜனநாயகத்தின் அடிப்படையையே மோடி அரசு தகர்த்து விட்டது என குற்றஞ்சாட்டினார். இந்த குற்றத்திற்காக மோடி தலைமையிலான அரசு உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் அவர் கூறினார். தொடர்ந்து பேசிய அவர், ராணுவ அதிகாரிகளின் செல்போன்கள் ஒட்டுக்கேட்பதால் நமது ரகசியம் சீனாவுக்கு கிடைத்துவிடும் என்றும் நமது ராணுவ ரகசியங்கள் தெரிந்தால் சீனாவுடன் போர் ஏற்படும்போது நாம் தோற்றுவிடுவோம் என்றும் குறிப்பிட்டார்.

Related Stories: