முக்கிய செய்தி இந்தியா இன்று உருவானது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி; தெலுங்கானா, ஆந்திரா, மகாராஷ்டிரா, சத்தீஸ்கரில் அதீத மழைக்கு வாய்ப்பு: இந்திய வானிலை மையம் Jul 22, 2021 தெலுங்கானா ஆந்திரப் பிரதேசம் மகாராஷ்டிரா சத்தீஸ்கர் இந்திய வானியல் துறை டெல்லி: வடமேற்கு வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. நாளை உருவாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் முன்கூட்டியே காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. காற்றழத்த தாழ்வு பகுதியால் தெலுங்கானா, ஆந்திரா, மகாராஷ்டிரா, சத்தீஸ்கரில் அதீத மழைக்கு வாய்ப்பு உள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பெருமழையால் ஏற்கனவே மும்பை பாதிப்பை சந்தித்துள்ள நிலையில் மகாராஷ்டிரா மாநிலத்திற்கு மீண்டும் ரெட் அலார்ட் விடுக்கப்பட்டுள்ளது. இதனால் அந்தந்த மாநிலங்கள் முன்னெச்சரிக்கை பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யுமாறு வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது. மேலும் தெற்கு, தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான கனமழை பெய்யக்கூடும் என்றும், வடமேற்கு, வடக்கு டெல்லி, ஜிந்த், ரோஹ்தக், கைதால், ரேவாரி, பவல், திசாரா, கஸ்கஞ்ச், பரத்பூர், நாட்பாய், பர்சனா போன்ற பகுதிகளில் அடுத்த 2 மணி நேரத்தில் மிதமான கனமழை பெய்யக்கூடும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு பருவக்காற்று காரணமாக தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் மழை பெய்தது. நேற்று நீலகிரி, கோயம்புத்தூர், தேனி ,திண்டுக்கல், தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களிலும், வட கடலோர மாவட்டங்கள் மற்றும் வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, சேலம், கிருஷ்ணகிரி, மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்தது. இந்நிலையில் வடமேற்கு வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
93 தொகுதிகளில் பிரசாரம் ஓய்ந்தது; நாளை 3ம் கட்ட தேர்தல் வாக்குப்பதிவு: 1351 வேட்பாளர்கள் போட்டி; பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்
முல்லை பெரியாறு அணையில் பராமரிப்பு பணிக்கு அனுமதி தர கேரளா அரசு தாமதம்: உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு விளக்க மனு
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2024-25 ஆம் ஆண்டிற்கான இளநிலைப் பட்டப்படிப்புக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு
கடலில் 2.8 கிமீ நீளத்தில் அமைக்கப்பட்டு வரும் பாம்பன் புதிய ரயில் பாலம் நடப்பாண்டு இறுதியில் திறப்பு: தெற்கு ரயில்வே அறிவிப்பு
பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட பெண்ணை கடத்திய வழக்கில் தேவகவுடா மகன் ரேவண்ணா கைது: கர்நாடக சிறப்பு புலனாய்வு குழு அதிரடி நடவடிக்கை
மோடியின் முகத்தில் ஒரு துளி தூசியை பார்த்திருக்கிறீர்களா? இப்படிப்பட்டவருக்கு மக்களின் பிரச்னை குறித்து எப்படித் தெரியும்: பிரியங்கா காந்தி
மே7 முதல் நீலகிரி மாவட்டத்துக்கு வரும் வெளிமாநில மற்றும் வெளி மாவட்ட மக்களுக்கு இ-பாஸ் கட்டாயம்: மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு
பாலியல் வன்கொடுமை வழக்கில் தலைமறைவாக உள்ள பிரஜ்வலின் தந்தையும் முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் மகனுமான ரேவண்ணா கைது
தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் கோவை, கிருஷ்ணகிரி உள்ளிட்ட 8 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்