முக்கிய செய்தி சென்னை தமிழகத்தில் இன்று முதல் பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழை இணையதளத்தில் மாணவர்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் : தேர்வுத்துறை அறிவிப்பு Jul 22, 2021 தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம் சென்னை: தமிழகத்தில் இன்று முதல் பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழை இணையதளத்தில் மாணவர்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என் தேர்வுத்துறை அறிவித்துள்ளது. இதன்படி www.dge.tn.gov.in, www.dge.tn.nic.in ஆகிய இணையதளங்களில் மதிப்பெண் பட்டியலை இன்று காலை 11 மணி முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அனைத்துத் தலைமை ஆசிரியர்களும் தங்கள் பள்ளிகளுக்கான அட்டவணைப்படுத்தப்பட்ட மதிப்பெண் பட்டியலை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று ஏற்கெனவே தேர்வுத் துறை தெரிவித்துள்ளது. முன்னதாக தற்போதைய மதிப்பெண் கணக்கீட்டில் திருப்தி இல்லாமல் தேர்வு எழுத வாய்ப்பு வழங்க வேண்டும் என்று விரும்பும் மாணவர்கள் மற்றும் பிளஸ்-1 தேர்வில் வரமுடியாமல் போனவர்களுக்கு தனியாக அழைப்பு விடுக்கப்படும். அதில் எத்தனை பேர் பதிவு செய்கிறார்கள் என்று பார்த்து வருகிற அக்டோபர் அல்லது செப்டம்பர் மாதத்தில் அவர்களுக்கு தேர்வு நடத்தப்படும் என்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. கொரோனா தொற்று காரணமாக தமிழகத்தில் பிளஸ் 2 மாணவர்களுக்கு தேர்வு ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில் மதிப்பெண் கணக்கிடப்பட்டு வழங்கப்படும் என்று மத்திய-மாநில கல்வி வாரியங்களால் அறிவிக்கப்பட்டது. அதன்படி, தமிழக அரசின் பள்ளிக்கல்வித் துறை மாநில வாரிய பாடத்திட்டத்தின்கீழ் படித்த பிளஸ்-2 மாணவர்களுக்கு மதிப்பெண்களை கணக்கிட்டு தேர்வுத்துறை அறிவித்தது.
புயல், வெள்ள நிவாரணத்துக்கு கேட்டதோ ரூ.38,000 கோடி தமிழ்நாட்டுக்கு ஒதுக்கியதோ ரூ.276 கோடி: தேர்தல் நடக்கும் கர்நாடகத்துக்கு ரூ.3454 கோடி ஒதுக்கீடு; ஒன்றிய அரசின் ஓரவஞ்சனை என முதல்வர், கட்சி தலைவர்கள் கண்டனம்
தமிழகத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் 1000 இடங்களில் ORS பாக்கெட்களை விநியோகிக்க பொது சுகாதாரத்துறை உத்தரவு
தமிழ்நாட்டுக்கு நிதியும் கிடையாது, நீதியும் கிடையாது என ஒன்றிய பாஜக அரசு வஞ்சிக்கிறது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்
ஓய்வு பெறும் ஆசிரியர்களுக்கு ஓய்வூதிய பலன்களை 30 நாட்களுக்குள் வழங்க நடவடிக்கை: அதிகாரிகளுக்கு பள்ளிக்கல்வி இயக்குநர் உத்தரவு
நாட்டில் உள்ள அனைத்து கிராமங்களிலும் லோக் அதாலத் பற்றிய விழிப்புணர்வு உள்ளது: உச்ச நீதிமன்ற நீதிபதி சஞ்சீவ் கண்ணா பெருமிதம்
மிக்ஜாம் புயல் பாதிப்பு; தமிழ்நாடு அரசு கேட்டது ரூ.38,000 கோடி; ஒன்றிய அரசு ஒதுக்கியதோ ரூ.285 கோடி.! தொடர்ந்து வஞ்சிக்கும் பாஜ அரசு
பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் அமேதி, ரேபரேலி தொகுதி வேட்பாளர்கள் யார்? காங்கிரஸ் மத்திய தேர்தல் குழு இன்று மாலை அறிவிக்கிறது
தினகரன்-சென்னை விஐடி இணைந்து நடத்தும் பிளஸ் 2 மாணவர்களுக்கான கல்வி கண்காட்சியை அமைச்சர் பொன்முடி தொடங்கி வைத்தார்: நூற்றுக்கும் மேற்பட்ட கல்லூரிகள் சார்பில் அரங்குகள் அமைப்பு
கோடை காலத்தில் தடையின்றி குடிநீர் விநியோகம் செய்வதற்காக ரூ.150 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு பேருந்துகளையும் 48 மணி நேரத்தில் ஆய்வு செய்து குறைகள் சரி செய்ய போக்குவரத்துத் துறை உத்தரவு
ரூ.63,000 கோடி சென்னை மெட்ரோ ரயில் 2ம் கட்ட திட்டத்திற்கு ரூ.1 கூட தராத ஒன்றிய அரசு.. மாநில நிதியில் செலவீனங்களை மேற்கொள்ளும் தமிழ்நாடு அரசு!!
திராவிட இனத்தின் உரிமைக்குரலை ஓங்கி ஒலித்த தீரர்!: சர்.பிட்டி தியாகராயரின் 173-வது பிறந்த நாளை ஒட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
தினகரன் நாளிதழும், விஐடியும் இணைந்து நடத்தும் கல்வி கண்காட்சியை சென்னை நந்தம்பாக்கத்தில் தொடங்கி வைத்தார் அமைச்சர் பொன்முடி!!