செல்போன் ஒட்டுக்கேட்பு விவகாரம்: நடிகர் சித்தார்த் விமர்சனம்

சென்னை: பிரபலங்கள் பலரின் தொலைபேசி ஒட்டுக் கேட்பு விவகாரத்தில் நடிகர் சித்தார்த், ஒன்றிய அரசை விமர்சித்துள்ளார். இந்த ஒட்டுக் கேட்பு விவகாரத்தில் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, பிரசாந்த் கிஷோர், திருமுருகன் உள்பட பலரது தொலைபேசிகள் ஒட்டுக் கேட்பதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஒட்டு கேட்பு விவகாரம் குறித்து பல பிரபலங்கள் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில் நடிகர் சித்தார்த் தனது டிவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பது: ஆரோக்கிய சேது போன்ற நம்பிக்கையற்ற செயலிகளை பயன்படுத்த ஒன்றிய அரசு ஏன் வலியுறுத்தியது என இப்போது புரிகிறதா?  அவர்கள் எப்போதும் பொய் சொல்வார்கள், எப்போதும் உளவு பார்ப்பார்கள். எனவே, ஏன் என கேட்கக்கற்றுக் கொள்ளுங்கள். அப்படி கேட்டால் தான் அவர்களிடம் இருந்து நமக்கு விடுதலை கிடைக்கும் என்று கூறியுள்ளார்.

Related Stories: