லடாக், மேகாலயா மற்றும் ராஜஸ்தானில் அடுத்தடுத்து நிலநடுக்கம்: வடமாநிலங்களில் தொடர்ந்து ஏற்படும் நிலநடுக்கங்களால் மக்கள் அச்சம்

மேகாலயா: மேகாலயா மற்றும் லடாக் பகுதிகளில் இன்று அதிகாலை லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மேகாலயாவில் அமைந்திருக்கும் வடக்கு காரோ மலைப்பகுதிகளில், இன்று அதிகாலை 2.10 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 4.1 என்ற அளவில் பதிவாகி இருப்பதாக தேசிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  இதனை தொடர்ந்து லடாக் யூனியன் பிரதேசத்தில் இன்று அதிகாலை 4.57 மணிக்கு ரிக்டர் 3.6 அளவில் லேசான நிலநடுக்கம் பதிவானது. இந்த இரு நில அதிர்வுகளும் குறைந்த தீவிரத்தை கொண்டிருந்ததால், மேகாலயா மற்றும் லடாக் பகுதிகளில் நிலநடுக்கம் காரணமாக எந்த பாதிப்புகளும் ஏற்படவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன. 

ராஜஸ்தானில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம், ரிக்டர் அளவுகோலில் 5.3ஆக பதிவாகி உள்ளது. ராஜஸ்தான் மாநிலம் பிகானிரியில் இன்று அதிகாலை 5.24 மணிக்கு திடீரென சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவு கோலில் 5.3ஆக பதிவானதாக தேசிய புவியியல் மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் தொடர்பான பாதிப்புகள் குறித்து உறுதியான தகவல் ஏதுவும் வெளியாகவில்லை. கடந்த சில வாரங்களாக வடமாநிலங்களில் தொடர்ந்து நிலநடுக்கங்கள் ஏற்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. 

Related Stories: