சிறுவாபுரி முருகன் கோயிலுக்கு சொந்தமான நிலங்களில் இருக்கும் ஆக்கிரமிப்பு அகற்றப்படும்: அமைச்சர் சேகர்பாபு தகவல்

சென்னை: பெரியபாளையம் அருகே சின்னம்பேடு ஊராட்சியில் சிறுவாபுரி கிராமத்தில் புகழ் பெற்ற ஸ்ரீபாலசுப்பிரமணியர் (முருகன்) கோயில் உள்ளது. இந்நிலையில், தமிழக இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு நேற்று சிறுவாபுரி முருகன் கோயிலில் ஆய்வு செய்தார். பின்னர், அவர் பத்திரிகையாளர்களிடம் கூறுகையில், ‘கோயில் குளம் சீரமைக்கப்படும். கோயிலுக்கு சொந்தமான இடங்களை ஆக்கிரமித்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு, ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும். பார்கிங் வசதி ஏற்படுத்தி தரப்படும். கோயிலுக்குள் சிசிடிவி கேமரா பொருத்தப்படும்.

மேலும், கோயில் நில குத்தகை பாக்கி முறையாக வசூல் செய்து கோயில் கணக்கில் சேர்க்கப்படும். என்றார். தேங்காய் மற்றும் பூ வியாபாரிகள் தங்களது வியாபாரத்திற்கு இடம் ஒதுக்கி தரும்படி அமைச்சரிடம் கோரிக்கை மனு வழங்கினார். அப்போது, அவருடன் எம்எல்ஏக்கள் கும்மிடிபூண்டி டி.ஜெ.கோவிந்தராஜன், துரை சந்திரசேகர், சுதர்சனம், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் உமா மகேஸ்வரி, தலைமை செயற்குழு உறுப்பினர் பி.ஜெ.மூர்த்தி, ஒன்றிய செயலாளர்கள் செல்வசேகரன், கருணாகரன், டி.கே.சந்திரசேகர், ரவி, ஆரணி பேரூர் செயலாளர் வெங்கடேசன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

Related Stories: