ஆஸி. டென்னிஸ் வீரருக்கு கொரோனா

சிட்னி: ஆஸ்திரேலியாவின் நம்பர் 1 டென்னிஸ் வீரர் அலெக்ஸ் டெமினோர் (22வயது, உலக அளவில் 17வது ரேங்க்). ஒலிம்பிக் போட்டியில் ஆஸி. சார்பில்  ஒற்றையர், இரட்டையர் பிரிவுகளில் பங்கேற்க இருந்தார். விம்பிள்டனுக்கு பிறகு ஸ்பெயின் சென்ற அலெக்ஸ் அங்கு தீவிர பயிற்சி மேற்கொண்டிருந்தார். நாளை  நேரடியாக ஜப்பான் செல்ல திட்டமிட்டிருந்த நிலையில், கொரோனா பரிசோதனையில் அவருக்கு தொற்று இருப்பது உறுதியானது. அதனால் அவர் தனது பயணத்தை ரத்து செய்ததுடன், அங்கேயே தன்னை  தனிமைப்படுத்திக்  கொண்டுள்ளார்.

இது குறித்து ஆஸி. ஒலிம்பிக் குழு தலைவர்  செஸ்டர்மேன் கூறுகையில், ‘அலெக்ஸ் பங்கேற்க முடியாதது மிகுந்த ஏமாற்றமளிக்கிறது.  சிறுவயது முதலே ஒலம்பிக்சில் விளையாடுவது அவரது கனவாக இருந்தது.  ஒற்றையர், இரட்டையர் பிரிவுகளில் விளையாட இருந்தார். இரட்டையர் பிரிவில் அவருடன் விளையாட இருந்த ஜான் பியர்ஸ் எப்படி களம் காணப்போகிறார் என்பது குறித்து இன்னும் தெளிவாகவில்லை.அலெக்சுடன் மற்ற வீரர்கள் நேரடி தொடர்பில் இல்லாததால் அவர்களின் டோக்கியோ பயணத்திற்கு எந்த தடையும் இல்லை. அவர்களுக்கு தொற்று இல்லை என்பதும் உறுதியாகி உள்ளது’ என்றார்.

Related Stories: