மாஸ்டர் கார்டு நிறுவன டெபிட், கிரெடிட் கார்டுகளுக்கு இந்திய ரிசர்வ் வங்கி தடை: விவரங்களை சேமிக்கும் சர்வரை இந்தியாவில் வைக்காததால் நடவடிக்கை !

டெல்லி: மாஸ்டர் கார்டு நிறுவன டெபிட், கிரெடிட் கார்டுகளுக்கு இந்திய ரிசர்வ் வங்கி தடை விதித்துள்ளது.. அதன்படி, ஜூலை 22 முதல் புதிய வாடிக்கையாளர்களை அதன் நெட்வொர்க்கில் சேர்க்க முடியாது. ரிசர்வ் வங்கியின் அறிக்கைப்படி, மாஸ்டர் கார்டு நிறுவனம் இந்தியாவில் கட்டண முறை தரவுகளை சேமிப்பதில் அதன் விதிமுறைகளை மீறியுள்ளது. கணிசமான நேரம் மற்றும் போதுமான வாய்ப்புகளை ரிசர்வ் வங்கி வழங்கிய போதும் மாஸ்டர் கார்டு நிறுவனம் வாடிக்கையாளர்கள் மீதான கட்டண தரவுகளை சேமிக்க தவறியது.

ரிசர்வ் வங்கியின் கட்டளைக்கு மாஸ்டர் கார்டு இணங்க தவறியதால் தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவு மாஸ்டர் கார்டின் தற்போதைய வாடிக்கையாளர்களை எந்தவிதத்திலும் பாதிக்காது.

மேலும், டிசம்பர் மாதத்தில் ரிசர்வ் வங்கி புதிய கிரெடிட் கார்டுகள் உட்பட எச்.டி.எஃப்.சி வங்கியில் அனைத்து டிஜிட்டல் அறிமுகங்களையும் தற்காலிகமாக தடை செய்தது. ஏனென்றால் வங்கியின் தகவல் தொழில்நுட்ப அமைப்பு கடந்த இரண்டு ஆண்டுகளாக சிக்கல்களை எதிர்கொண்டது, இதன் காரணமாக இணைய வங்கி மற்றும் கட்டண முறைகளில் பல குறைபாடுகள் இருந்ததால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. மேலும், வாடிக்கையாளர் விவரங்களை சேமிக்கும் சர்வரை இந்தியாவில் வைக்காததால் மாஸ்டர் கார்டுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

Related Stories: