நீட் தேர்வு ஆய்வுக்குழுவின் பரிந்துரை அறிக்கை நீதிபதி ஏ.கே.ராஜன் குழு இன்று அரசிடம் ஒப்படைப்பு

சென்னை: தமிழ்நாட்டில் நீட் தேர்வின் தாக்கம் குறித்து ஆய்வு செய்து அரசுக்கு அறிக்கை சமர்ப்பிக்கும் வகையில் ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழு ஒன்றை முதல்வர் மு.க.ஸ்டாலின் அமைத்து கடந்த மாதம் 10ம் தேதி அறிவித்தார்.இந்த ஆய்வுக் குழு, நீட் தேர்வு சமுதாயத்தின் பின்தங்கிய மாணவர்களுக்கு பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளதா என்பது  குறித்தும், அவ்வாறு பாதிப்பு ஏற்பட்டிருந்தால்,  சரி செய்யும் வகையில் இம்முறைக்கு மாற்றாக அனைவரும் பயன்பெறும் வகையிலான மாணவர் சேர்க்கை முறைகளை வகுத்து, அவற்றை நடைமுறைப்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் பற்றியும் ஆய்வு செய்து,ஒரு மாத காலத்தில் அரசுக்கு தனது பரிந்துரைகளை வழங்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

அதன்பேரில் பொதுமக்கள், மாணவர்கள், கல்வியாளர்கள், பெற்றோர், சமூக நல ஆர்வலர்கள் என பலதரப்பில் இருந்தும் கருத்துகளை பெற்று வந்தது. அந்த கருத்துகள் பெரும்பாலும் நீட் தேர்வு வேண்டாம் என்பதாகவே இருக்கிறது. இதையடுத்து, இந்த குழு 4 முறை கூடி மேற்கண்ட கருத்துகள் மீது ஆய்வு செய்தது. இதன் தொடர்ச்சியாக, மேற்கண்ட குழுவுக்கு 86 ஆயிரம் கருத்துகள் வரப்பெற்றன. அவற்றின் மீது ஆய்வுகள் நடத்தி விரைவில் அரசுக்கு பரிந்துரையை வழங்குவோம் என்றும் நீதிபதி ஏ.கே.ராஜன் தெரிவித்து இருந்தார். இதையடுத்து, இன்று அந்த குழுவினர் முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து நீட் தேர்வின் பாதிப்பு குறித்து தங்கள் பரிந்துரையை அளிக்க உள்ளனர்.

Related Stories: