வரதட்சணை கொடுமைகளுக்கு எதிராக திருவனந்தபுரத்தில் இன்று கவர்னர் உண்ணாவிரதம்

திருவனந்தபுரம்: கேரளாவில் சமீபகாலமாக பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. கடந்த ஒருசில மாதங்களில் வரதட்சணை கொடுமைக்கு ஏராளமான பெண்கள் பலியானார்கள். இந்த நிலையில் கேரளாவில் பெண்கள் மீதான குற்றங்களுக்கு எதிராகவும், பெண் பாதுகாப்பை வலியுறுத்தியும் கவர்னர் ஆரிப் முகம்மதுகான் போராட்டத்தில் குதித்துள்ளார். அதன்படி திருவனந்தபுரத்தில் இன்று காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை  உண்ணாவிரத போராட்டம் நடத்துகிறார். காலையில் வீட்டில் உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கும் கவர்னர் மாலை 4.30 மணிக்கு திருவனந்தபுரம்  காந்திபவனில் நடக்கும் உண்ணாவிரத போராட்டத்தில் கலந்துகொள்கிறார். இந்த  போராட்டத்தில் கேரளாவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் காந்தியவாதிகள் உள்பட ஏராளமானோர் கலந்துகொள்கின்றனர்.

Related Stories: