பெரம்பலூர் புதிய பஸ்ஸ்டாண்டில் போதை ஆசாமிகளால் பயணிகளுக்கு இடையூறு-காவல்துறை நடவடிக்கை எடுக்குமா?

பெரம்பலூர் : போக்குவரத்துக்கு இடையூறு செய்திடும் போதை ஆசாமிகள். பஸ்களுக்கு இடையே படுத்துக்கிடக்கும் அவலம். போலீசார் நடவடிக்கை எடுக்க பயணிகள்இ பஸ் டிரைவர்கள்இ சமூகஆ ர்வலர் வேண்டுகோள்.பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்தின் நுழைவுவாயில் மற்றும் பஸ்டாண்டின் உள்ளேயும் டாஸ்மாக் மதுக்கடைகள் உள்ளன. சமீப நாட்களாக தினமும் இந்த புதுபஸ்டாண்டில் உள்ள டாஸ்மாக் மதுபானக் கடையில் மதுபாட்டில்களை வாங்கி பஸ்டாண்டு உள்ளேயே மரத்தடி பகுதிகளை திறந்தவெளி பாராகப் பயன்படுத்திக் கொண்டு குடிமகன்கள் குடித்து கும்மாளமடித்துவிட்டுச் செல்லுகின்றனர்.

பலர் தனியாக வந்து மரத்தடியில் நின்று குடித்துவிட்டு, போதை ஏறியபிறகு பாதை தெரியாமல் பஸ் ஏற முடியாமல் பஸ் நிறுத்தங்களில் 2 பஸ்களுக்கு இடையேயும், அனைத்து பஸ்களும் வெளியே செல்லும் பிரதான வழித்தடங்களை ஆக்கிரமித்தும் போதையில் பாதையில் கிடக்கின்றனர். இவர்களின் அலங்கோலமாக கிடப்பதைக் கண்டு அவ்வழியாக செல்பவர்கள் முகத்தை சுளித்தபடி செல்கின்றனர். மேலும் காலி மதுபாட்டில்களை பயணிகள் செல்கின்ற நடைபாதைகளிலும், தார்சாலைகளிலும் போட்டு விட்டும், உடைத்துவிட்டும் செல்கின்றனர். போதாக்குறையாக பயணிகள் நிழற் குடைகளை ஆக்கிரமித்துபடுத்து தூங்கிவிட்டு போதை தெளிந்தபிறகும் வீடுசெல்கின்றனர்.

இதனால் பயணிகள் நிழற்குடையும் துர் நாற்றத்துடன் காணப்படுகிறது. இதுகுறித்து பெரம்பலூர் மாவட்ட எஸ்பி மணி விரைந்து நடவடிக்கை எடுத்து பஸ்நிலையத்திற்கு வந்து செல்லும் பயணிகளுக்குப் பாதுகாப்பு அளித்திட வேண்டும் என பஸ் பயணிகளும்,பஸ் டிரைவர்களும், சமூக ஆர்வலர்களும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Related Stories: