மின் பொறியாளர்கள் பணி இடங்களை நிரப்ப வேண்டும்: மின் பொறியாளர் சங்கம் சார்பில் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கோரிக்கை

சென்னை: தமிழ்நாடு பொதுப்பணித்துறை மின் பொறியாளர் சங்கம் சார்பில் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:

* கலைஞர் முதலமைச்சராக இருந்த போது, 1990ம் ஆண்டு கருத்துரு சமர்பிக்கப்பட்டு தோற்றுவிக்கப்பட்ட 3 கண்காணிப்பு பொறியாளர் (மின்) பணியிடங்கள் 2018ம் ஆண்டு வரை திறம்பட செயல்பட்ட நிலையில் அப்பதவியினை அதிகாரமற்ற இணைத் தலைமை பொறியாளர் (மின்) ஆக மாற்றியமைக்கப்பட்டது. இதை மீண்டும் கண்காணிப்பு பொறியாளர் (மின்) பணியிடமாக மாற்றி இழந்த உரிமைகளை மீட்டு தர வேண்டும்.

* வேலைப்பளுவின் அடிப்படையில் கூடுதலாக தேவைப்படும் அனைத்து நிலை பொறியாளர் பணியிடங்கள் (ஏஇ,ஜேஇ, ஏஇஇ, இஇ) மற்றும் வானொலி பணியாளர் பணியிடங்கள் நிரப்ப வேண்டும்.

* ஒன்றிய அரசின் பொதுப்பணித்துறை கட்டிடம், மின் மற்றும் கட்டிட கலை வல்லுநர்கள் ஆகியோர்களுக்கு ஒரே விதமான நிதி அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதை போன்று, தமிழ்நாடு அரசில் டாக்டர் கலைஞரால் உருவாக்கப்பட்ட மின் அலகிற்கும், கட்டிட அலகில் அனைத்து நிலை பொறியாளர்களுக்கு ஒரே விதமான நிதி அதிகாரத்தை வழங்க வேண்டும்.

* காலியாக உள்ள முக்கிய பணியிடங்களை உயர் மின் அழுத்த இயக்குபவர் மற்றும் மின்களப்பணியாளர்கள் நிரப்ப வேண்டும்.

* மின் பணிகளின் தரத்தை உயர்த்தும் பொருட்டு, தற்போது நடைமுறையில் உள்ள சிவில் மற்றும் மின் பணிகளுக்காக கோரப்படும் ஒருங்கிணைந்த ஒப்பந்த முறையை மாற்றி மின் பணிகளுக்கென தனி ஒப்பந்தம் கோர வேண்டும்.

* மின் அலகிற்கான பிரத்யேக ஒரு தலைமை பொறியாளர் (மின்) பணியிடம் உருவாக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: