புதுச்சேரி மாநிலத்தில் ஜூலை 16ம் தேதி முதல் 9 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு

புதுச்சேரி: புதுச்சேரியில் ஜூலை 16 முதல் பள்ளிகள் திறக்கப்படும் என முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்துள்ளார். நாடு முழுவதும் கொரோனா தொற்றின் இரண்டாம் அலையின் காரணமாக கல்வி நிலையங்கள் அனைத்தும் கடந்த கல்வியாண்டில் மூடப்பட்டுள்ளது. இதனால் மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் மட்டுமே நடத்தப்பட்டது. நேரடி வகுப்புகள் நடக்காத நிலையில், மாணவர்களுக்கு இறுதி தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டு மாணவர்கள் தேர்வின்றி தேர்ச்சி செய்யப்பட்டனர்.

மேலும், கொரோனா பரவல் காரணமாக அறிவிக்கப்பட்ட ஊரடங்கின் காரணமாக தொடர்ந்து பாதிப்பு குறைந்து வருகிறது. இந்நிலையில், 2021- 2022 ம் ஆண்டிற்கான புதிய கல்வி ஆண்டும் தொடங்கப்பட்டுள்ளது. தற்போது ஆன்லைன் வகுப்புகள் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், புதுவை துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் புதுவை ஆசிரியர்களுக்கான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். இதனால் ஆசிரியர்கள் அனைவரும் கண்டிப்பாக கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும். மேலும், மாணவர்களின் நலன் கருதி வகுப்புகள் சுழற்சி முறையில் நடத்தப்படும் என்றும் தகவல்கள் வெளியானது.

இதனையடுத்து, புதுச்சேரியில் ஜூலை 16 முதல் பள்ளிகள் திறக்கப்படும் என்று ஆளுநர் தமிழிசை சந்திப்புக்கு பிறகு முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்துள்ளார். வரும் 16ம் தேதி முதல் 9- 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கான வகுப்புகள் நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: