தூய்மை இந்தியா தரவரிசை பட்டியலுக்காக மருத்துவமனைகள், பொதுக்கழிவறைகள், குப்பைகள் கையாளும் முறைகள் ஆய்வு-வேலூர் மாநகராட்சியில் 8 பேர் குழு களமிறங்கியது

வேலூர் : தூய்மை இந்தியா தரவரிசை பட்டியலுக்காக மருத்துவமனைகள், பொதுக்கழிவறைகள், குப்பைகள் கையாளும் முறைகள் குறித்து ஆய்வு செய்ய வேலூர் மாநகராட்சியில் 8 பேர் கொண்ட குழுவினர் களமிறங்கி, ஆய்வு செய்து வருகின்றனர். நாடுமுழுவதும் ஒவ்வொரு ஆண்டும் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் தூய்மையான நகரங்கள் தரவரிசை பட்டியல் வெளியிடப்படுகிறது. அதன்படி இந்த ஆண்டிற்கு தூய்மை இந்தியா தரவரிசை பட்டியல் வெளியிடுவதற்கான ஆய்வுகள் தொடங்கப்பட்டுள்ளது.

இதில் வேலூர் மாநகராட்சியில் மத்திய அரசு நியமித்துள்ள தமிழகத்தைச் சேர்ந்த 8 பேர் கொண்ட குழுவினர் வேலூர் மாநகராட்சியில் நேற்று முதல் ஒவ்ெவாரு வார்டுகளாக சென்று ஆய்வு செய்யும் பணியினை தொடங்கியுள்ளனர். இந்நிலையில் நேற்று வேலூர் மாநகராட்சியில் உள்ள மருத்துவமனைகளில் மருத்துவக்கழிவுகள் ைகயாளும் முறை, சிகிச்சை அளிக்கும் முறை குறித்து ஆய்வு செய்தனர். மேலும் ஓட்டல்கள், வணிகவளாகங்களில் குப்பைகள் கையாளும் முறை, பொதுக்கழிவறைகள் தூய்மையாக உள்ளதா?

சாலை வசதிகள் சரியாக உள்ளதா? குடிநீர் வசதிகள் உள்ளதா? என்று ஒவ்வொன்றையும் ஆய்வு செய்து, அதனை போட்ேடா எடுத்து டெல்லிக்கு அனுப்பி ைவத்தனர். மாநகராட்சியில் உள்ள 60 வார்டுகளிலும் இந்த ஆய்வு நடத்தி அந்த விவரங்கள் டெல்லிக்கு அனுப்பி வைப்பார்கள்.அதேபோல் அனைத்து நகரங்களிலும் ஆய்வு நடத்தி முடிக்கப்பட்டு, அதன் அடிப்படையில், தூய்மை இந்தியா தரிவரிசை பட்டியலில் நகரங்கள் வரிசை படுத்தப்பட்டு சான்றுகள் வழங்கப்படும் என்று மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories: