மயிலாடுதுறை அருகே உள்வாங்கிய பாலம், சாலை எம்எல்ஏ ராஜகுமார் பார்வை-உடனடியாக சரிசெய்ய நடவடிக்கை

மயிலாடுதுறை : மயிலாடுதுறை அருகே உள்ள வில்லியநல்லூர் பகுதியில் உள்ள பாலாகுடி பன்னீர்வெளி சாலையை ஒட்டி 2 ஏக்கரில் பாலாகுடி பிள்ளையார்கோயில் குளம் உள்ளது. இந்த குளத்திற்கும் பாலாகுடி வாய்க்காலுக்கும் இடையே சாலை செல்வதால் சிறுபாலம் அமைக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு தூர்வாருவதற்கு அனுமதி வாங்கிய அதிமுகவினர் 20 அடி ஆழம்வரை மண் எடுத்துள்ளனர். இதனால் மழைநீர் மற்றும் ஆற்றுநீர் குளத்திற்குள் சென்றபோது கரையை அரித்து பாலம் உள்வாங்கியதுடன் சாலையிலும் உடைப்பு ஏற்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டிருந்தது.

உடனடியாக மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து பாலம் மற்றும் சாலையை சரிசெய்து மீண்டும் பேருந்து போக்குவரத்திற்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என்று பாலாகுடி, பன்னீர்வெளி மற்றும் மேலாநல்லுர் பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்திருந்த செய்தி தினகரன் நாளிதழில் நேற்றுமுன்தினம்(8ம்தேதி) படத்துடன் வெளியானது.இதைக்கண்ட மயிலாடுதுறை எம்எல்ஏ ராஜகுமார், மயிலாடுதுறை ஓன்றிய ஆணையர் ரெஜினாமேரி, வட்டார வளர்ச்சி அலுவலர் விஜயலட்சுமி மற்றும் ஒன்றிய பொறியாளர்களுடன் சென்று உடைந்து கிடக்கும் பாலம் மற்றும் சாலையை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.

எம்எல்ஏ ராஜகுமார் கூறுகையில், உடனடியாக பைப்லைன் போட்டு தற்காலிகமாக சாலையை பயன்பாட்டிற்குக் கொண்டு வரும் பணி துவங்க உள்ளது, கனரக வாகனங்கள் செல்வதற்கு மாற்றுப்பாதை தயார் செய்யப்படும், நிரந்தர பாலம் அமைக்க உடன் நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது என்றார்.

Related Stories: