இந்திய விமானப்படைக்கு 499 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஆகாஷ் ஏவுகணைகளை வாங்க உடன்பாடு

டெல்லி: இந்திய விமானப்படைக்கு 499 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஆகாஷ் ஏவுகணைகளை தயாரித்து வழங்க பாதுகாப்பு அமைச்சகத்துடன் பாரத் டைனமிக்ஸ் நிறுவனம் உடன்பாடு செய்துள்ளது. பீரங்கி எதிர்ப்பு ஏவுகணைகள், வானிலிருந்து வான் இலக்கைத் தாக்கும் ஏவுகணைகள் வானிலிருந்து தரை இலக்கைத் தாக்கும் ஏவுகணைகள் ஆகியவற்றை தயாரித்து ராணுவம் விமானப்படை ஆகியவற்றுக்கு பாரத் டைனமிக்ஸ் நிறுவனம் வழங்கி வருகிறது. தற்போது பாரத் டைனமிக்ஸ் தயாரிக்க உள்ள ஆகாஷ் ஏவுகணை 720 கிலோ எடை கொண்டதாகும். 60 கிலோ எடையுள்ள வெடிபொருட்களை சுமந்து கொண்டு 30 கி.மீ. தொலைவு வரை உள்ள இலக்கை தாக்கி அளிக்கும் திறன் கொண்டது.

Related Stories: