சென்னை : தமிழகத்திற்கு ஒரு மத்திய அமைச்சர் கிடைத்திருக்கிறார் என்று மகிழ முடியவில்லை என்று மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை நேற்று விரிவாக்கம் செய்யப்பட்டது. இதில் 43 பேர் அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டனர். இவர்களில் 15 பேர் கேபினட் அமைச்சர்கள். மீதமிருக்கும் 28 பேர் இணை அமைச்சர்கள்.புதிய அமைச்சர்களுக்கான இலாகாக்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் இருந்து தேர்வாகி, மத்திய இணை அமைச்சராக இருக்கும் எல். முருகனுக்கு மீன்வளத்துறை, தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை கால்நடை மற்றும் பால்வளத் துறை இலாகா ஒதுக்கப்பட்டிருக்கிறது.