யூடியூப்பை பார்த்து போதைப்பொருள் தயாரிக்கும் கோவை இளைஞர்கள்: உயிருக்கு ஆபத்து என மருத்துவர்கள் எச்சரிக்கை

கோவை: யூடியூப்பை பார்த்து கோவையை சேர்ந்த இளைஞர்கள் போதைமருந்தை தயாரித்து அதனை ஊசி மூலம் செலுத்திக்கொள்ளும் பதறவைக்கும் காட்சிகள் வெளியாகியுள்ளன. கோயம்புத்தூரில் கொரோனா பொதுமுடக்கத்தால் மதுக்கடைகள் திறக்கப்படாமல் இருந்ததால் குடி நோய்க்கு ஆளானவர்கள் போதைப்பொருளுக்கு மாறியுள்ளனர். முதலில் போதைப்பொருளை வாங்கி பயன்படுத்தியவர்கள் பின்னர் அவைகளை அவர்களே தயாரிக்க ஆரம்பித்துள்ளனர். கோவை மருந்தகங்களில் அதிக விலை கொடுத்து மாத்திரைகளை வாங்கும் இளைஞர்கள் யூடியூப்பை பார்த்து அதனை போதை மருந்தாக தயாரிக்கின்றனர்.

இவ்வாறு இளைஞர்கள் போதைமருந்தை தயாரித்து ஊசியில் செலுத்திக்கொள்ளும் பதறவைக்கும் காட்சிகள் வெளியாகியுள்ளன. இவ்வாறு போதை மருந்தை செலுத்துவதால் உடல்நலம் கடுமையாக பாதிக்கப்படும் என்றும் உயிரிழப்பு ஏற்படும் என்றும் மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர். இதனை தடுக்க மருந்து மாத்திரை விற்பனையை முறைப்படுத்த வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர். போதைப்பொருளின் தீமையை உணர்ந்து அதில் இருந்து இளைஞர்கள் மீள வேண்டும் என்றும் அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

Related Stories: