35 ரேஷன் கடைகளை ஒரே துறையின் கீழ் செயல்படுத்த நடவடிக்கை: முதல்வரின் முடிவுக்கு கூட்டுறவு பண்டக சாலை ஊழியர்கள் சங்கம் வரவேற்பு

சென்னை:தமிழ்நாடு கூட்டுறவு பண்டக சாலை ஊழியர்கள் சங்க கூட்டம் காணொலி காட்சி வாயிலாக நடந்தது. இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து பொதுச்செயலாளர் வெங்கடாச்சலபதி கூறியதாவது:  சட்டமன்ற தேர்தலை ஒட்டி அனைத்து வகை கூட்டுறவு பணியாளருக்கும் ஊதிய உயர்வு வழங்கப்பட்டது. தொடக்க நுகர்வோர் கூட்டுறவு பண்டகசாலை வகை பணியாளருக்கு ஊதிய உயர்வு வழங்க குழு பரிந்துரை அளித்த நிலையில் தேர்தல் விதிமுறை அமலுக்கு வந்ததினால் ஊதிய உயர்வு நிறுத்தி வைக்கப்பட்டது. பின்னர் விதிமுறை தளர்த்தியும் ஊதிய உயர்வு அமல்படுத்தாமல் இருப்பதால் பணியாளர்கள் ஏமாற்றத்தில் உள்ளனர்.

அந்தந்த கூட்டுறவு பண்டகசாலையின் நிதியில் ஊதியம் பெற அரசு ஏற்கனவே பதிவாளர் அதிகாரத்தின் கீழ் புதிய பதிவாளர்கள் பார்வையில் உள்ள ஊதிய உயர்வு கோப்பின் மீது முடிவு எடுத்து ஆணை வழங்க வேண்டும். முதல்வர் ஆய்வு கூட்டத்தில் நியாய விலை கடைகளை ஒரே துறையின் கீழ் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்கிற முடிவினை வரவேற்கிறோம்.  பொதுமக்களுக்கு ஸ்மார்ட் கார்டு வழங்கும் பணி குடிமை பொருள் ஒதுக்கீடு செய்யும் பணியினை அயல்பணியாக செய்து வரும் வருவாய்த்துறையிடம் இருந்து கூட்டுறவு துறை பொது விநியோக திட்ட நிர்வாகத்துக்கு மாற்றம் செய்வதன் மூலம் நியாய விலை கடைகளை நிர்வாகம் செய்யும் கூட்டுறவத்துறையே இப்பணிகளை செய்தால் ஒரே துறை நிர்வாகம், ஒரே துறை ஆய்வு, ஒரே துறை மக்கள் பணி என்ற நிலை ஏற்படுவதன் மூலம் அரசிற்கு செலவு குறையும், பணியாளர்கள் நெருக்கடி குறையும். குடும்ப கார்டுதாரர்கள் நேரடியாக பயன்பெறுவார்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: