தமிழகம் முன்னாள் அமைச்சர் பூண்டி கி. அய்யாறு வாண்டையார் உடல் நலக்குறைவு காரணமாக சென்னையில் உயிரிழப்பு: மாலை பூண்டியில் இறுதி சடங்கு Jul 04, 2021 முன்னாள் அமைச்சர் புருண்டி கி தஞ்சை: தஞ்சாவூரைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் பூண்டி கி. அய்யாறு வாண்டையார் (86) உடல் நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் இன்று அதிகாலை காலமானார். இவர், கடந்த மே மாதம் உடல் நலக்குறைவால் மறைந்த பூண்டி ஸ்ரீ புஷ்பம் கல்லூரி முன்னாள் செயலர் - தாளாளர், முன்னாள் மக்களவை உறுப்பினருமான கி. துளசிஅய்யா வாண்டையாரின் இளைய சகோதரர் ஆவார். காங்கிரஸ் கட்சியில் முக்கியப் பிரமுகராக இருந்த இவர் தஞ்சாவூர் சட்டப்பேரவைத் தொகுதியில் 1984- ஆம் ஆண்டில் நடைபெற்ற இடைத்தேர்தலில் அக்கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதையடுத்து காங்கிரஸிலிருந்து விலகி அதிமுகவில் இணைந்த இவர் 2001-ஆம் ஆண்டில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் திருவையாறு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அப்போது, 23 நாள்கள் அறநிலையத் துறை அமைச்சராகப் பொறுப்பு வகித்தார். தொடர்ந்து 2006-ஆம் ஆண்டு வரை சட்டப்பேரவை உறுப்பினராக இருந்தார். மேலும் தஞ்சாவூர் வங்கி இயக்குநராகவும், பல்வேறு கிளப்களில் கௌரவ பொறுப்பிலும் இருந்தவர். இவர் உடல்நிலை பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஒரு மாதமாக சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் இவர் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை மருத்துவமனையில் காலமானார். இவரது உடல் இன்று தஞ்சாவூருக்கு கொண்டுவரப்பட்டு பூண்டி கிராமத்தில் மாலையில் இறுதிச்சடங்கு செய்யப்பட உள்ளது. இவரது மனைவி அம்மணி அம்மாள் 2013 ஆம் ஆண்டில் காலமானார். மகன் தனசேகர வாண்டையார், மகள் பொன்னம்மாள் ஆவாா்.
வார விடுமுறை முடிந்து சென்னை திரும்ப மக்கள்: சிங்கப்பெருமாள் கோவில் அருகே திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல்
விவசாய நிலங்களையும், இந்து கோவில்களையும் யானை வழித்தடமாக மாற்ற முயற்சி: தொண்டாமுத்தூர் விவசாயிகள் கண்டனம்
நீலகிரி மாவட்டத்துக்கு சுற்றுலா செல்வோர் இ-பாஸ் பெற epass.tnega.org என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்!
கன்னியாகுமரி மாவட்டம் தேங்காய்பட்டணம் கடற்கரையில் நின்று கொண்டிருந்தபோது ராட்சத அலையில் சிக்கி குழந்தை மாயம்
போலாந்து நாட்டு பெண்ணை மணந்த வேப்பனப்பள்ளி மாப்பிள்ளை: முற்றிலும் தமிழ் கலாச்சார முறைப்படி நடந்த வெளிநாட்டு பெண்ணின் திருமணம்!
பட்டாபிராம் துணை மின்நிலையத்தில் உயர் அழுத்த மின்மாற்றி கொழுந்துவிட்டு எரிந்தது: தற்காலிக மின்சேவை வழங்க திட்டம்
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2024-25 ஆம் ஆண்டிற்கான இளநிலைப் பட்டப்படிப்புக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு
பைக்காரா படகு இல்லம் செல்ல தடை நீண்ட நேரம் காத்திருந்து ஊட்டி ஏரியில் படகு சவாரி செய்யும் சுற்றுலா பயணிகள்
மேல்நிலை இரண்டாமாண்டு பொதுத்தேர்வு முடிவுகள் நாளை (06-05-2024) காலை 9.30 மணிக்கு வெளியாகும்: அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு