இன்ஸ்டாகிராமில் ஒரு பதிவுக்கு ரூ.3 கோடி அள்ளும் பிரியங்கா சோப்ரா

சென்னை: நடிகர், நடிகைகள் பேஸ்புக், டிவிட்டர், இன்ஸ்ட்ராகிராமில் இருப்பதும், தன்னை பின் தொடர்பவர்களோடு கருத்துக்களை பரிமாறிக் கொள்வதும் சமூக அக்கறை, நட்பு பாராட்டுதல் என்பதை தாண்டி அது பணம் கொட்டும் ஒரு விஷயமாக இருப்பதாலும்தான். வெளிநாட்டு புள்ளி விவர நிறுவனம் ஒன்று சமூக வலைத்தளங்களில் அதிகம் சம்பாதிக்கும் 100 பிரபலங்கள் பற்றிய தகவல்களை வெளியிட்டுள்ளது. அதன்படி உலக அளவில் அதிகம் சம்பாதிப்பவர் கால்பந்தாட்ட வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ.

தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு விளம்பர பதிவை வெளியிட 11 கோடி ரூபாய் வாங்குகிறார். இந்திய அளவில் முதலிடம் பிடித்திருப்பவர் கிரிக்கெட் கேப்டன் விராட் கோலி, இவர் ஒரு பதிவுக்கு ரூ.5 கோடி வாங்குகிறார். அவரை 132 மில்லியன் பேர் பின் தொடர்கிறார்கள். உலக அளவில் 19வது இடத்தை விராட் கோலி பிடித்துள்ளார். பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா, ஒரு பதிவுக்கு 3 கோடி ரூபாய் வாங்குகிறார். அவரை 65 மில்லியன் பேர் பின்தொடர்கிறார்கள். உலக அவளில் அவர் 27வது இடத்தை பிடித்துள்ளார். முன்னணி தமிழ் நடிகர், நடிகைகள் ஒரு விளம்பர பதிவுக்கு சில லட்சங்கள் வாங்குகிறார்கள்.

Related Stories: