தேசிய காசநோய் எதிர்ப்பு விழிப்புணர்வு வார விழா: டி.ஜெ.கோவிந்தராஜன் எம்எல்ஏ பங்கேற்பு

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டியில் தேசிய காசநோய் விழிப்புணர்வு வாரத்தை ஒட்டி காசநோயாளிகளுக்கு சத்தான உணவு பொருட்கள் அடங்கிய தொகுப்பை எம்எல்ஏ டி.ஜெ.கோவிந்தராஜன் வழங்கினார். கும்மிடிப்பூண்டி வட்டார சுகாதாரத்துறை மற்றும் திருஇருதயசபை சார்பில் தேசிய காசநோய் விழிப்புணர்வு வார விழா நடந்தது. இந்நிகழ்ச்சியில், கும்மிடிப்பூண்டி ஒன்றிய குழு தலைவர் கே.எம்.எஸ்.சிவகுமார், துணை தலைவர் மாலதி குணசேகரன், வட்டார வளர்ச்சி அலுவலர் வாசுதேவன், ஒன்றிய செயலாளர் மு.மணிபாலன், தூய இருதய சபை ஒருங்கிணைப்பாளர் அருட்சகோதரி மேரி ஜோஸ்பினாள், கும்மிடிப்பூண்டி ஒன்றிய நிர்வாகிகள் பாஸ்கரன், திருமலை ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

முன்னதாக சுகாதாரத்துறை துணை இயக்குனர்(காசநோய்) லட்சுமி முரளி, வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் கோவிந்தராஜ் ஆகியோர் வரவேற்றனர். இதில் சிறப்பு அழைப்பாளராக கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ டி.ஜெ.கோவிந்தராஜன் பங்கேற்று, கும்மிடிப்பூண்டி வட்டாரத்தை காசநோய் அற்ற பகுதியாக மாற்ற சுகாதாரத்துறையினருடன் பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். பின்னர் பூந்தமல்லி திருஇருதய சபையின் சார்பில் காச நோயாளிகள் 100 பேருக்கு 15 வகையான சத்தான உணவுப்பொருட்கள், சோப்பு, மாஸ்க் உள்ளிட்ட தொகுப்பை வழங்கினார்.  நிகழ்வில் மாவட்ட கவுன்சிலர் ராமஜெயம், சாரதம்மா முத்துசாமி, சுகாதார ஆய்வாளர் முரளிகிருஷ்ணன், கிராம சுகாதார செவிலியர்கள் கன்னியாகுமரி, ஆனந்தி, கீழ்முதலம்பேடு ஊராட்சி தலைவர் கே.ஜி.நமச்சிவாயம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Related Stories: