மருத்துவமனைகளுக்கு கொரோனா தடுப்பூசிகள் ஒதுக்கீடு: வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது தமிழக சுகாதாரத்துறை

சென்னை: மருத்துவமனைகளுக்கு கொரோனா தடுப்பூசிகள் ஒதுக்கீடு செய்வது தொடர்பாக தமிழ்நாடு சுகாதாரத்துறை வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிட்டுள்ளது. தமிழகத்திற்கு தேவையான கொரோனா தடுப்பூசிகளை மத்திய அரசு முறையாக வழங்குவது இல்லை என்ற குற்றச்சாட்டை தமிழ்நாடு அரசு முன்வைத்து வருகிறது. சமீபத்தில் கொரோனா தடுப்பூசி ஒதுக்கீட்டை மாநிலங்களின் மக்கள்தொகைக்கு ஏற்ப வழங்கிட வேண்டும்.

அரசு மருத்துவமனைகளுக்கான ஒதுக்கீட்டை 90 விழுக்காடாக உயர்த்த வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய அரசுக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதினார். பொதுமக்கள் அரசு மருத்துவமனைகளிலேயே கொரோனா தடுப்பூசி செலுத்தி வரும் நிலையில் தனியாருக்கு ஒதுக்கீடு செய்யும் தடுப்பூசி அளவை 10% மட்டுமே தரவேண்டும் என்று ஸ்டாலின் கூறியிருந்தார். இந்நிலையில் கொரோனா தடுப்பூசிகள் ஒதுக்கீடு செய்துவது குறித்து தமிழக சுகாதாரத்துறை சில வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.

கூடுதல் தடுப்பூசிகள் பெற தனியார் மருத்துவமனைகள் கோவின் செயலியில் பதிவு செய்ய வேண்டும் என்று கூறியுள்ள சுகாதாரத்துறை, கூடுதல் தடுப்பூசிகள் பெற தனியார் மருத்துவமனைகள் கோவின் செயலியில் பதிவு செய்ய வேண்டும் என்று கூறியுள்ளது. புதிய மருத்துவமனைகளுக்கு படுக்கைகள் மற்றும் பயன்பாட்டின் அடிப்படையில் தடுப்பூசிகள் ஒதுக்கீடு செய்யப்படும்.தனியார் மருத்துவமனைகளில் தினசரி தடுப்பூசி பயன்பாடு தொடர்பான தகவலை உடனுக்குடன் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது.

Related Stories: