கொரோனா பிரிவுகளில் பணியாற்றிய 90 செவிலியர்கள் திடீரென பணிநீக்கம்

வேலூர்: வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொரோனா பிரிவுகளில் தற்காலிகமாக பணியாற்றிய 90 செவிலியர்கள் திடீரென பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மே 13ஆம் தேதி முதல் 2 மாதங்களாக பணியாற்றி வந்த செவிலியரை மருத்துவமனை நிர்வாகம் திடீரென திருப்பி அனுப்பியுள்ளது.

இதனால் அதிர்ச்சியடைந்த செவிலியர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மனு அளிக்க சென்றனர். நீண்ட நேர காத்திருப்புக்கு பிறகு ஆட்சியரின் நேர்முக உதவியாளரிடம் கோரிக்கை மனுவை அளித்தனர். அதேபோல் காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் துணை செவிலியராக பணியாற்றி வந்த 70க்கும் மேற்பட்டோர் திடீரென நீக்கப்பட்டதால் சாலைமறியல் போராட்டத்தில் அவர்கள் ஈடுபட்டனர். அவர்கள் தங்களுக்கு 2 மாதகால ஊதியமும் கொரோனா கால நிவாரணமும் வழங்கப்படவில்லை என வேதனையோடு கூறினர்.

Related Stories: