தங்கம் கடத்தல் வழக்கு அமீரக தூதரகத்துக்கு சுங்கத்துறை நோட்டீஸ்

திருவனந்தபுரம்: திருவனந்தபுரத்தில்  உள்ள ஐக்கிய அரபு அமீரக தூதரகம் மூலம் தங்கம் கடத்தப்பட்ட சம்பவம்  பரபரப்பை ஏற்படுத்தியது.  இதுதொடர்பாக துணை தூதரின் நிர்வாக செயலாளராக  பணிபுரிந்து வந்த  சொப்னா, பிஆர்ஓ சரித்குமார் உள்பட 20க்கும் மேற்பட்டோர்   கைதாகினர். இந்த வழக்கை சுங்க இலாகா, என்ஐஏ மற்றும் மத்திய அமலாக்கத்துறை  விசாரித்து வருகிறது. சொப்னா, சரித்குமாரிடம் நடந்த விசாரணையில்,  அமீரக  தூதரகத்தின் துணை தூதர் ஜமால் உசேன் அல்சாபி, இன்னொரு உயர்  அதிகாரி  ராஷிக் காமிஸ் ஆகியோருக்கும் தொடர்பு இருப்பதாக கூறினர். இதற்கிடையே 2  பேரும் துபாய் சென்றுவிட்டனர். இதனால்  அவர்களிடம் விசாரணை நடத்த  முடியவில்லை.

அவர்களிடம் விசாரணை நடத்த சுங்க இலாகா மத்திய   வெளியுறவுத்துறையிடம் அனுமதி கோரியது. இதுதொடர்பான நடவடிக்கைகளை மத்திய  அரசு எடுத்துள்ளது. 1962ம் ஆண்டின்  சுங்கஇலாகா சட்டம் பிரிவு 124ன்படி  வெளியுறவுத்துறை டெல்லியில் உள்ள அமீரக  தூதரகத்துக்கு நோட்டீஸ்  கொடுத்துள்ளது. ஒரு  நாட்டின் தூதரகத்துக்கு நோட்டீஸ் கொடுப்பது இதுவே  முதல்முறையாகும்.

Related Stories: