திருவண்ணாமலை அருகே 2 வாலிபர்களை கொன்று கிணற்றில் சடலங்கள் வீச்சு

திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் பழைய இரும்புக் கடையில் வேலை பார்த்து வந்தவர்கள் பிரபாகரன்(29). வெங்கடேசன்(21). நேற்று முன்தினம் கடையில் இருந்து வேலையை முடித்துவிட்டு சென்ற இருவரும் வீட்டுக்கு செல்லவில்லை. இந்நிலையில், நேற்று காலை திருவண்ணாமலை அடுத்த சேரியந்தல் கிராமத்தில் உள்ள ஐயப்பன் நகர் பகுதியில் முழுமையாக நிரம்பியுள்ள விவசாய கிணற்றின் அருகே பிரபாகரனின் பைக்கும், மதுபாட்டில்களும், இரண்டு ஜோடி செருப்புகளும் இருந்தன. அதைப்பார்த்து சந்தேகம் அடைந்த அப்பகுதி மக்கள், போலீசுக்கு தகவல் அளித்தனர். அதைத்தொடர்ந்து, தீயணைப்புத்துறையினர் விரைந்து வந்து இருவரது சடலங்களையும் மீட்டனர். இருவரது தலையிலும், முகத்திலும் ரத்த காயங்கள் இருந்தன. எனவே அவர்களை யாரோ அடித்துக்கொலை செய்து சடலங்களை கிணற்றில் வீசி உள்ளனர். கொலையாளிகளை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Related Stories: