தடுப்பூசி செலுத்துவதை தீவிரப்படுத்த வேண்டும்: கலெக்டர்களுக்கு சுகாதாரத்துறை உத்தரவு

சென்னை: தமிழகத்தில்  ஏப்ரல், மே மாதங்களில்  எடுக்கப்பட்ட சோதனையின்படி  சென்னை, காஞ்சிபுரம்,  மதுரை என தமிழகத்தில் 9 பேருக்கு டெல்டா பிளஸ் வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து இந்த மாவட்டங்களில்  டெல்டா பிளஸ் வைரஸ் பரவாமல் தடுக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு மத்திய அரசு கடிதம் எழுதியுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறுகையில்: மத்திய அரசின் கடிதம் கிடைப்பதற்கு முன்பாகவே அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.  

தற்போது உள்ள சூழ்நிலையில் டெல்டா பிளஸ் நோய்த் தொற்று யாருக்காவது இருப்பது கண்டறியப்பட்டால் அவர்களை உடனடியாக மருத்துவமனையில் சேர்த்து தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்.  இந்த நோயால் பாதிக்கப்படும்  குடும்பத்தினர் மட்டுமின்றி பக்கத்து வீட்டில் உள்ளவர்கள், அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கு பாதிப்பு இருக்கிறதா என்று சோதனை செய்ய வேண்டும்.   மேலும் கொரோனா நோய் தொற்று பரவாமல் தடுக்க தடுப்பூசி தான் ஒரே வழி என்பதால் தடுப்பூசி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி அனைவருக்கும் தடுப்பூசி போடுவதை தீவிரமாக்க வேண்டும்.

டெல்டா பிளஸ் எந்த மாவட்டத்தில் இருந்தால் அவர்களுக்கு உடனடியாக சிகிச்சை அளித்து நோய் பரவாமல் தடுக்க வேண்டும். கொரோனா 2வது அலைக்கு டெல்டா வைரஸ் தான் காரணம், நோய் இல்லாத இடங்களில் கொரோனா பாதிப்பு இல்லையென்றால் அந்த பகுதிகளில் அதிக வேகமாகவும் பரவுகிறது. எனவே டெல்டா பிளஸ் வைரசை ஆரம்பத்திலேயே கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறினர்.

Related Stories: