பொன்னமராவதியில் ஜமாபந்தி கிராம கணக்குகளை அதிகாரி ஆய்வு

பொன்னமராவதி : பொன்னமராவதியில் நடந்த 3ம் நாள் ஜமாபந்தியில் கிராம கணக்குகளை சிறப்பு ஆர்டிஓ ஆய்வு செய்தார்.பொன்னமராவதி தாலுகா அலுவலகத்தில் ஜமாபந்தி 1430ம் பசலி ஜமாபந்தி கடந்த 22ம் தொடங்கி 24ம் தேதி 3 நாட்கள் நடந்தது. சிறப்பு டிஆர்ஓ மற்றும் ஜமாபந்தி அலுவலர் ஜானகி தலைமையில் காரையூர் பிர்க்கா ஜமாபந்தி 22ம் தேதியும், அரசமலை பிர்க்காவிற்கு 23ம் தேதியும், பொன்னமராவதி பிர்காவிற்கு 24ம் தேதியும் நடந்தது.

ஜமாபந்தி அலுவலர் ஜானகி ஜமாபந்தி பசலிக்கான கிராம கணக்குகளை ஆய்வு செய்தார். அதனைத் தொடர்ந்து கிராஸ் டேப் அளவு முறைகளை நேரடி ஆய்வு செய்தார். கொரோனா காலம் என்பதால் ஜமாபந்தியில் நேரடியாக மனுக்கள் கொடுக்காமல் ஆன்லைன் மூலம் பொதுமக்கள் வரும் 31ம் தேதி வரை தங்களது கோரிக்கை மனுக்களை அனுப்பலாம் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த மனுக்கள் அனைத்தும் தீர்வு காணப்பட்டு ஜமாபந்தி கணக்கில் முடிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் யாரும் நேரடியாக மனுக்கள் அளிக்கவில்லை.பொதுமக்கள் இன்றி அலுவலர்களை கொண்டு ஜமாபந்தி நடந்தது. ஜமாபந்தி மேற்பார்வையாளர் திருநாவுக்கரசு, தாசில்தார் ஜெயபாரதி துணை தாசில்தார் பிரகாஷ், வருவாய் ஆய்வாளர்கள் ஜோதி, பாண்டி, ரவிச்சந்திரன் விஏஓக்கள் கிராம உதவியாளர்கள் மற்றும் பல்துறை அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: