ஒவ்வொரு தேர்தலிலும் கட்சிகளுக்கு புதிய சின்னங்கள் ஒதுக்கீடு செய்வது வாக்காளர்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்தும்: தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு

சென்னை: ஒவ்வொரு தேர்தலிலும் கட்சிகளுக்கு புதிய சின்னங்கள் ஒதுக்கீடு செய்வது வாக்காளர்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்தும். கட்சிகளுக்கு நிரந்தர சின்னங்கள் ஒதுக்கும் சட்டப்பிரிவை எதிர்த்த வழக்கில் உயர்நீதிமன்றத்தில் பதில் மனுவை தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தாக்கல் செய்தார். வாக்குப்பதிவை விரைந்து நடத்தவும், வாக்காளர்களின் வசதிக்காகவும் சின்னங்கள் பயன்படுத்தப்படுகின்றன. சின்னங்களை பிரபலப்படுத்த அரசு நிதியையோ, அரசு இயந்திரத்தையோ பயன்படுத்தக்கூடாது. அரசு இயந்திரத்தை பயன்படுத்தினால் சின்னம் திரும்பப் பெறப்படும், தேர்தல் ரத்து செய்யப்படும். நிரந்தர சின்னங்களை ஒதுக்குவதை எதிர்த்த மனுவை தள்ளுபடி செய்ய தலைமை தேர்தல் அதிகாரி கோரிக்கை வைத்துள்ளார். தமிழ்நாடு தேர்தல் அதிகாரி பதில் மனுவை அடுத்து வழக்கு விசாரணை 3 வாரங்களுக்கு தள்ளிவைக்கப்பட்டது.

Related Stories:

>