வேதாரண்யம் அருகே முள்ளியாறு மாணங்கொண்டான் ஆற்றில் வெங்காய தாமரைகள் அகற்ற வேண்டும்-விவசாயிகள் கோரிக்கை

வேதாரண்யம் : வேதாரண்யம் அருகே முள்ளியாறு மாணங்கொண்டான் ஆற்றில் உள்ள வெங்காய தாமரைகளை அகற்ற வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வேதாரண்யம் தாலுகா தாணிக்கோட்டகம் வாய்மேடு பிராந்தியங்கரை வரை முள்ளியாற்று பாசன பகுதி ஆகும் இப்பகுதிகளில் 525 ஏக்கரில் குறுவை சாகுபடி செய்ய விவசாயிகள் மும்முரம் காட்டி வருகின்றனர் மேட்டூர் அணை குறுவை சாகுபடிக்கு 18வது முறையாக ஜூன் 12ம் தேதி திறப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் இந்நிலையில் இப்போது டிராக்டர் வைத்து உழுதல், நாட்டு விடுதல், நேரடி நெல் விதைப்பு போன்ற பணிகள் நடைபெறுகிறது.

இப்பணிகளை வேதாரண்யம் வேளாண்மை உதவி இயக்குனர் நவீன் குமார் ஆய்வு செய்தார் குறுவை சாகுபடிக்காக தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில் வேதாரண்யம் பகுதியில் தூர்வாரும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. தூர்வாரும் பணியில் ஆற்றின் கரைகள் பலப்படுத்தப்பட்டு தூர் வரப்படுகிறது இந்நிலையில் வேதாரண்யம் தாலுகா தாணிக்கோட்டகம், வாய்மேடு, தென்னடார் மருதூர், ஆயக்காரன்புலம் வரை உள்ள முள்ளி ஆற்றுப்பாசன பகுதியில் மானங்கொண்டான் வடிகால் தொகுதி ஆகியவற்றில் உள்ள வெங்காயத் தாமரைகள் அகற்ற வேண்டும் என விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: