சென்னை காவல் துறையில் 69 உதவி கமிஷனர்கள் பணியிடமாற்றம்; டிஜிபி திரிபாதி உத்தரவு

சென்னை: சென்னை மாநகர காவல் துறையில் பணியாற்றி வந்த 69 உதவி கமிஷனர்கள் கூண்டோடு பணியிடமாற்றம் செய்து டிஜிபி திரிபாதி உத்தரவிட்டுள்ளார். இது குறித்து தமிழக காவல் துறை டிஜிபி திரிபாதி வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது: திருச்சி நகர குற்ற ஆவணம் காப்பகத்தில் இருந்த சுரேந்திரன் சென்னை எம்.கே.பி நகர் உதவி கமிஷனராகவும், சென்னை செயின்ட் தாமஸ் மவுண்ட்டில் இருந்த செம்பெடு பாபு, செம்பியம் உதவி கமிஷனராகவும், சென்னை எம்.கே.பி நகரில் பணியாற்றி வந்த கலைசெல்வன் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவின் (சென்னை வடக்கு) உதவி கமிஷனராவும், வேலூர் சமூக நீதி மற்றும் மனித உரிமை ஆணையத்தில் பணியாற்றி வந்த முத்துவேல்பாண்டி சென்னை பூந்தமல்லி உதவி கமிஷனராகவும்,

சேலம் நகர வடக்கு குற்றப்பிரிவில் பணியாற்றி வந்த கமலக்கண்ணன் சென்னை பாதுகாப்பு பிரிவு உதவி கமிஷனராவும், மயிலாப்பூரில் பணியாற்றி வந்த நெல்சன் அடையார் உதவி கமிஷனராகவும், கோட்டூர்புரம் உதவி கமிஷனர் ஜீவானந்தம் தரமணி உதவி கமிஷனராகவும், திருவல்லிக்கேணி உதவி கமிஷனர் சரவணன் அயனாவரம் உதவி கமிஷனராகவும், எழும்பூர் உதவி கமிஷனராக இருந்த சுப்பிரமணியன் கோட்டூர்புரம் உதவி கமிஷனராவும், அடையார் உதவி கமிஷனராக இருந்த கவுதமன் மயிலாப்பூர் உதவி கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளனர்.

அதேபோல், தரமணியில் இருந்த ரவி துரைப்பாக்கம் உதவி கமிஷனராவும், தி.நகர் உதவி கமிஷனர் கலியான் வளசரவாக்கம் உதவி கமிஷனராவும், வடபழனி உதவி கமிஷனராக இருந்த ஆரோக்கிய ரவீந்திரன் பல்லாவரம் உதவி கமிஷனராகவும்,

வளசரவாக்கம் உதவி கமிஷனர் மகிமைவீரன் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவின் (சென்னை கிழக்கு) உதவி கமிஷனராவும், மீனம்பாக்கம் உதவி கமிஷனராக இருந்த நடேசன் வேப்பேரி உதவி கமிஷனராவும், சென்னை மாநகர காவல் துறை யின் மக்கள் தொடர்பு உதவி கமிஷனராக இருந்த பாஸ்கர் திருவல்லிக்கேணி உதவி கமிஷனராகவும், பெரம்பலூர் மாவட்டம் நில அபகரிப்பு தடுப்பு பிரிவில் இருந்த ரகுபதி சென்னை நுங்கம்பாக்கம் உதவி கமிஷனராவும், திருச்சி நகர சட்டம் ஒழுங்கில் இருந்த ரவி அபி ராம் சென்னை நுங்கம்பாக்கம் உதவி கமிஷனராகவும், சென்னை பாதுகாப்பு பிரிவு சிஐடியில் இருந்த கிரிஸ்டின் ஜெயசில் சைதாப்பேட்டை உதவி கமிஷனராவும், சிறப்பு பிரிவு-சிஐடி தலைமையிடத்தில் இருந்த புகழ்வேந்தன் கிண்டி உதவி கமிஷனராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், பூந்தமல்லி உதவி கமிஷனராக இருந்த சுதர்சன் நீலாங்கரை உதவி கமிஷனராகவும், விழுப்புரம் மாவட்டம் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்ப்பு பிரிவில் இருந்த பாலமுருகன் சென்னை வடபழனி உதவி கமிஷனராகவும், நீலகிரி  மாவட்டத்தில் இருந்த அமீர் அகமது சென்னை செயின்ட் தாமஸ் மவுண்ட் உதவி கமிஷனராகவும், சென்னை மத்திய குற்றப்பிரிவு உதவி கமிஷனராக இருந்த அர்னால்ட் ஈஸ்டர் மீனம்பாக்கம் உதவி கமிஷனராகவும், திருச்சி நகர நில அபகரிப்பு சிறப்பு பிரிவில் இருந்த சீனிவாசன் தாம்பரம் உதவி கமிஷனராகவும், சென்னை பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவில் இருந்த முருகேசன் சேலையூர் சரக உதவி கமிஷனராகவும், செங்கல்பட்டு மாவட்ட குற்றப்பரிவில் இருந்த ப்ரான்க் டி ரூபன் சென்னை மடிப்பாக்கம் உதவி கமிஷனராகவும், சென்னை வீராபுரம் தமிழ்நாடு சிறப்பு பிரிவு IIIல் இருந்த ரமேஷ் கீழ்ப்பாக்கம் உதவி கமிஷனராகவும், தேனாம் பேட்டையில் இருந்த தேவராஜ் காத்திருப்போர் பட்டியலுக்கும், நீலாங்கரையில் இருந்த சாகதேவன் வில்லிவாக்கம் உதவி கமிஷனராகவும், நியமிக்கப்பட்டுள்ளனர்.

அதேபோல், தர்மபுரி மாவட்டம் நில அபகரிப்பு சிறப்பு பிரிவில் இருந்த ரமேஷ் சென்னை நுண்ணறிவு பிரிவுக்கும், அரியலூர் மாவட்ட குற்ற ஆவணம் காப்பகத்தில் இருந்த வெற்றி செழியன் சென்னை நுண்ணறிவுப்பிரிவுக்கும், சென்னை நுண்ணறிவுப்பிரிவில் இருந்த அல்டிரின் போக்குவரத்து புலானாய்வு பிரிவுக்கும், மதுரை ரயில்வே டிஎஸ்பியாக இருந்த கருணாகரன் சென்னை மத்திய குற்றப்பிரிவுக்கும், துரைப்பாக்கத்தில் இருந்த ஜான் விக்டர் மத்திய குற்றப்பிரிவுக்கும், காவல் தொலைதொடர்பு துறையில் இருந்த ராஜசேகரன் சென்னை மத்திய குற்றப்பிரிவுக்கும், நுங்கம்பாக்கத்தில் இருந்த அண்ணாதுரை சென்னை மத்திய குற்றப்பிரிவுக்கும், எண்ணூரில் இருந்த கந்தக்குமார் சென்னை மத்திய குற்றப்பிரிவுக்கும், சென்னை உயர்நீதிமன்ற உதவி கமிஷனராக இருந்த சரஸ்வதி சென்னை மத்திய குற்றப்பிரிவுக்கும், திருமங்கலத்தில் இருந்த சிவக்குமார் காத்திருப்போர் பட்டியலுக்கும் மாற்றப்பட்டுள்ளார்.

காத்திருப்போர் பட்டியலில் இருந்த விஸ்வந்த் ஜெயின் சென்னை வடக்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவுக்கும், தஞ்சை நகர டிஎஸ்பியாக இருந்த பாரதி ராஜன் தி.நகர் உதவி கமிஷனராகவும், புளியந்தோப்பில் இருந்த கிருஷ்ணமூர்த்தி சிறைத்துறை நுண்ணறிவு பிரிவு மற்றும் விஜயலென்ஸ் பிரிவுக்கும் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்கள். இதுதவிர,அம்பத்தூர் போக்குவரத்து உதவி கமிஷனராக இருந்த மணிமாறன், கீழ்ப்பாக்கம் போக்குவரத்து பிரிவு உதவி கமிஷனராக இருந்த ரவிச்சந்திரன், அடையார் போக்குவரத்து பிரிவு உதவி கமிஷனர் ஜோசப், தி.நகர் போக்குவரத்து பிரிவு உதவி கமிஷனராக இருந்த ராஜன், அண்ணாநகர் போக்குவரத்து பிரிவு உதவி கமிஷனராக இருந்த சோக்கையா,

வண்ணாரப்பேட்டை போக்குவரத்து பிரிவு உதவி கமிஷனராக இருந்த சக்திவேல், திருவல்லிக்கேணி போக்குவரத்து பிரிவு உதவி கமிஷனராக இருந்த சேகர், கிண்டி உதவி கமிஷனராக இருந்த பாண்டி, சேலையூர் உதவி கமிஷனராக இருந்த விஸ்வேஷ்வரய்யா, மடிப்பாக்கம் உதவி கமிஷனராக இருந்த சவரிநாதன், மத்திய குற்றப்பிரிவில் இருந்த சுரேஷ், விஜய் அனந்த், பொன்னுசாமி, செல்வகுமார், கிழக்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு உதவி கமிஷனராக இருந்த நல்லதுரை, வடக்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு உதவி கமிஷனராக இருந்த சுந்தரம் ஆகியோர் காத்திப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளனர். இவ்வாறு டிஜிபி திரிபாதி வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: