கும்மிடிப்பூண்டி அருகே தொற்று இல்லாத தீவு

கும்மிடிப்பூண்டி:  கும்மிடிப்பூண்டி அருகே ஆந்திர எல்லையில், ஆரம்பாக்கம் மற்றும் சுண்ணாம்புகுளம் பகுதிக்கு இடையே பழவேற்காடு ஏரி பகுதியில் இருக்கம் தீவு உள்ளது. இங்கு தமிழ் பேசும் 1000 பேர் வசிக்கின்றனர். இப்பகுதி மாணவர்கள் ஆரம்பாக்கம், சுண்ணாம்புகுளம் பகுதிகளில் உள்ள அரசு பள்ளிகளில் படிக்கின்றனர். இந்நிலையில், கொரோனா தொற்றின் 2 அலைகளிலும் இத்தீவில் வசிக்கும் மக்கள் பாதிக்கப்படவில்லை. அவர்கள் நாள்தோறும் மீன் உண்பதாலும், ஊரைவிட்டு யாரும் வெளியே வருவதில்லை என்பதாலும் கொரோனாவினால் பாதிக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது..

இதுகுறித்து இருக்கம் தீவை சேர்ந்த ஆறுமுகம் கூறுகையில், கொரோனா தொற்றின் முதல் மற்றும் 2-வது அலையில், நாங்கள் அதிகமாக சென்று வரும் சுண்ணாம்புகுளம், ஓபசமுத்திரம் பகுதி மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். இதில் சில உயிரிழப்புகளும் ஏற்பட்டன. அப்போது நாங்கள் யாரும் தீவை விட்டு வெளியே வரவில்லை. அதனால் இன்றுவரை எங்கள் தீவில் யாருக்கும் கொரோனா தொற்று ஏற்படவில்லை. மேலும் மீன் உணவு, சுத்தமான கடல் காற்றே எங்களை காத்து வருகிறது என ஆறுமுகம் கூறினார்.

Related Stories: