மலைவாழ் மக்களுக்காக 10 புதிய ஆம்புலன்ஸ் சேவை: முதல்வர் தொடங்கி வைத்தார்

சென்னை: மலைவாழ் மக்களின் சேவைக்காக 10 புதிய அவசரகால ஆம்புலன்ஸ் சேவையை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார். தமிழ்நாடு அரசின் 108 இலவச அவசரகால ஊர்தி சேவை பயன்பாட்டிற்காக கரூர் வைஸ்யா வங்கி வழங்கிய 2 மேம்படுத்தப்பட்ட உயிர்காக்கும் அவசரகால ஊர்திகள் மற்றும் மலைவாழ் மக்களின் சேவைக்காக, மலைப் பகுதிகளில் செல்லும் வகையில் 8 அவசரகால ஊர்திகள், என மொத்தம் 1 கோடியே 76 லட்சத்து 87 ஆயிரத்து 472 ரூபாய் மதிப்பிலான 10 அவசரகால ஊர்திகளின் சேவையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று தலைமைச் செயலகத்தில், கொடியசைத்து தொடங்கி வைத்தார். அப்போது, அவசரகால ஊர்திகளை பார்வையிட்டு, அதில் செய்யப்பட்டுள்ள வசதிகள் குறித்து கேட்டறிந்தார்.

Related Stories:

>