மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு புகார்!: சுஷில்ஹரி பள்ளியில் சிக்கிய 5 ஹார்டு டிஸ்க்குகள் தீவிர ஆய்வு..!!

சென்னை: மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு குறித்த புகாரில் சிக்கியுள்ள கேளம்பாக்கம் சுஷில்ஹரி பள்ளியில் கைப்பற்றப்பட்ட முக்கியமான ஹார்டு டிஸ்க்குகளை ஆய்வு செய்யும் பணியில் தடயவியல் துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். சென்னையை அடுத்த கேளம்பாக்கத்தில் சிவசங்கர் பாபாவுக்கு சொந்தமான சுஷில்ஹரி இன்டர்நேஷனல் பள்ளியில் சி.பி.சி.ஐ.டி. எஸ்.பி. விஜயகுமார் தலைமையிலான காவல்துறை அதிகாரிகள் நேற்று அதிரடி சோதனை நடத்தினர். 

சுஷில்ஹரி பள்ளி வளாகத்தில் உள்ள அனைத்து கண்காணிப்பு கேமராக்களையும் ஆய்வு செய்த அதிகாரிகள், முக்கியமான இடங்களில் உள்ள 5 கண்காணிப்பு கேமராக்களின் ஹார்டு டிஸ்க்குகளை கைப்பற்றினர். இதனை சென்னை  மைலாப்பூரில் உள்ள அரசு தடயவியல் துறை ஆய்வகத்திற்கு அனுப்பி வைத்துள்ளனர். சி.பி.சி.ஐ.டி. அதிகாரிகள் அறிவுறுத்தல்படி 8 ஆண்டுகளுக்கு முன்பு பதிவான காட்சிகளை நவீன தொழில்நுட்ப உதவியுடன் திரும்ப எடுக்கும் முயற்சியில் தடயவியல் துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். 

Related Stories:

>