மேகதாதுவில் அணை கட்டப்படும் என்று கர்நாடக முதல்வர் அறிவித்துள்ளமைக்கு தமிழக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம்

சென்னை : மேகதாதுவில் அணை கட்டப்படும் என்று கர்நாடக மாநில முதலமைச்சர் அறிவித்துள்ளமைக்கு தமிழக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.துகுறித்து தமிழக முன்னாள் முதல்வரும் தற்போதைய சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி, “தமிழ்நாட்டில் உள்ள பெரும்பான்மையான மாவட்டங்களின் குடிநீர் தேவை மற்றும் விவசாய தேவைகளை பூர்த்தி செய்வது காவிரி ஆற்றின் நீர் காவிரி நீர். இதை முறையாக பெறுவதற்கு முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அரசு பல சட்ட போராட்டங்கள் நடத்தி வெற்றி கண்ட தமிழ்நாட்டு மக்கள் நன்கு அறிவார்கள். பன் மாநில நதிநீர் தாவா சட்டம் 1956இல் பிரிவு 5(2)ல் குறிப்பிட்டுள்ளவாறு காவிரி நடுவர் மன்ற இறுதி ஆணையை கடந்த 2007 அன்று பிறப்பித்தது. அதனைத் தொடர்ந்து மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மேற்கொண்ட தொடர் போராட்டத்தினாலும் , கொடுத்த அழுத்தத்தினாலும், உச்சநீதிமன்றத்தில் விட்டாலும் காவிரி நடுவர் மன்ற இறுதி ஆணை 2013 அன்று மத்திய அரசிதழில் வெளியிடப்பட்டது.

இதனைத் தொடர்ந்து தமிழ்நாடு அரசு கர்நாடகா மற்றும் கேரளா மாநிலங்கள் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்களை விசாரித்த உச்ச நீதிமன்றம் கடந்த 2018 ஆம் ஆண்டு வழங்கிய தீர்ப்பின்படி தமிழ்நாட்டிற்கு கர்நாடக அரசு இரு மாநில எல்லையான பிலிகுண்டுலு வில் 177.25 டிஎம்சி அடி நீர் வழங்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தது.

இதைத்தொடர்ந்து கடந்த அதிமுக ஆட்சியில் சட்ட போராட்டங்கள் மற்றும் உச்ச நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்ததைத் தொடர்ந்து காவிரி நீர் மேலாண்மை ஆணையம் மற்றும் காவேரி நீர் முறைப்படுத்தும் குழு ஆகியவை அமைக்கப்பட்டது. மேலும் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை முழுமையாக செயல்படுத்த அதிமுக அரசு 2018 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தில் சில கோரிக்கைகள் மீது உத்தரவு பிறப்பிக்க வேண்டிய இடைக்கால மனுவை தாக்கல் செய்தது.

பிரதமர் நரேந்திர மோடி அவர்களை நான் சந்தித்து நான் கர்நாடக அரசு மேகதாதுவில் அணை கட்டுவதை தடுக்க வேண்டும் என்று கோரிக்கை மனு அளித்ததோடு அணை கட்டினால் தமிழ்நாட்டில் டெல்டா மாவட்டங்கள் பாலைவனமாகி விடும் என்பதையும் எடுத்துக் கூறினேன் . கர்நாடக அரசு 2019ஆம் ஆண்டு அன்று சுற்றுச்சூழல் அனுமதி அளிக்கக்கோரி மத்திய அரசின் சுற்றுச்சூழல் வழங்கல் மற்றும் பருவநிலை மாற்றம் அமைச்சகத்தை அணுகியது. இதனால் நான் பிரதமருக்கு அனுப்பிய கடிதத்தில் கர்நாடகாவின் மேகதாது அணை திட்டத்திற்கு சுற்றுச்சூழல் அனுமதி வழங்கக்கூடாது எனவும் கர்நாடக அரசின் திட்ட அறிக்கையை மத்திய அரசின் சுற்றுச்சூழல் மன்றங்கள் மற்றும் பருவநிலை மாற்றம் அமைச்சகம் முற்றிலும் நிராகரித்து திருப்பி அனுப்புமாறு, ஜல்சக்தி அமைச்சகத்திற்கு உத்தரவிடவேண்டும் என்று வலியுறுத்தி கேட்டுக் கொண்டேன்

இது சம்பந்தமான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள இச்சூழலில் மேகதாதுவில் அணை கட்டப்படும் என்று கர்நாடக முதலமைச்சரின் ஒருதலைப்பட்சமான அறிவிப்பிற்கு எனது கடுமையான கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். கர்நாடக அரசின் நடவடிக்கைகளை கூர்மையாக கவனித்து தமிழ்நாட்டிற்கு கிடைக்கப் பெறுகின்ற காவிரி நீரை முழுமையாகப் பெறுவதற்கும் மேகதாதுவில் அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசியல் போக்கில் எள்முனையளவு கூட இடமளிக்காமல் தமிழ் நாட்டின் விவசாய பெருமக்களின் வாழ்வாதாரத்தை காப்பதற்கான நடவடிக்கைகளை முழுமையாக தொடர்ந்து எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசை கேட்டுக்கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

Related Stories: