ரூ.12,550 கோடியை வசூலிக்க ஏர் இந்தியாவை கேட்கும் கெய்ர்ன் டாடாவுக்கு சிக்கல்

புதுடெல்லி:  கடந்த 2006-07ம் ஆண்டு இங்கிலாந்தைச் சேர்ந்த கெய்ர்ன் நிறுவனம் தன்னுடைய பங்குகளை இந்தியாவில் உள்ள தனது கிளை நிறுவனத்துக்கு மாற்றியது. இந்த பங்குகளை மாற்றிய வகையில் முதலீட்டு ஆதாயத்தை கெய்ர்ன் இந்தியா அடைந்துள்ளதாக கூறி அந்த நிறுவனத்துக்கு ரூ.10,247 கோடி வரி விதித்தது வருமான வரித்துறை. ஆனால், இந்த வரியை செலுத்த கெய்ர்ன் நிறுவனம் மறுத்து விட்டது. உள்நாட்டில் நடந்த வழக்குகளில் தோற்றதால், கடந்த 2011ம் ஆண்டு கெய்ர்ன் நிறுவனத்தின் 10% பங்குகளை இந்திய அரசு முடக்கியது.   

இதை எதிர்த்து தி ஹேக் நகரில் உள்ள சர்வதேச தீர்ப்பாயத்தில் கெய்ர்ன் நிறுவனம் முறையீடு செய்தது. இந்த வழக்கி்ன் தீர்ப்பில், இந்த நிறுவனத்துக்கு ரூ.12,550 கோடி நிவாரணமாக வழங்கும்படி மத்திய  அரசுக்கு உத்தரவிடப்பட்டது. இந்நிலையில், இந்த தொகையை  வசூலிக்க, அமெரிக்காவில் உள்ள ஏர் இந்தியாவின் விமானம் மற்றும் அதன் சொத்துக்களை கைப்பற்ற கெய்ர்ன் நிறுவனம் வழக்கு தொடர்ந்துள்ளது. இப்புதிய வழக்கின் காரணமாக ஏர் இந்தியாவை வாங்கும் முயற்சியில் தீவிரமாகஈடுபட்டுள்ள டாடா நிறுவனத்துக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.

Related Stories: