சாலையோர மக்களுக்கு உணவளிக்கும் ராசி கன்னா

சென்னை: தமிழில் இமைக்கா நொடிகள், அடங்கமறு, சங்கத்தமிழன், அயோக்யா படங்களில் நடித்தவர் ராசி கன்னா. ஐதராபாத்தில் வசித்து வரும் அவர் கொரோனா காலத்தில் சாலையோர மக்களுக்கு உணவளிக்கும் பணியை செய்து வருகிறார். கொரோனாவின் முதல் அலையின்போது மருத்துவ பணியாளர்கள் மற்றும் சாலையோர மக்களுக்கு உணவளித்தார். தற்போது 2வது அலையின்போதும் அந்த பணியை தொடங்கி உள்ளார். தன்னார்வ தொண்டு நிறுவனம் ஒன்றுடன் இணைந்து 1200 பேருக்கு 3 நாட்களுக்கான உணவு தேவையை பூர்த்தி செய்யும் வகையில் பிரட், பிஸ்கட், பழங்கள் அடங்கிய பையை அவர் ஐதராபாத்தில் நேற்று வழங்கினார். இந்த பணியை கொரோனா காலம் முடியும் வரை தொடர்ந்து செய்ய இருப்பதாகவும் அவர் அறிவித்திருக்கிறார்.

Related Stories:

>