சென்னை மாநகராட்சி சார்பில் பிற மாவட்டங்களுக்கு 1,633 ஆக்சிஜன் செறிவூட்டிகள் அனுப்பி வைப்பு: அதிகாரிகள் தகவல்

சென்னை: கொரோனா இரண்டாவது அலையின் தாக்கம் அதிகரித்த நிலையில் தொற்றால் பாதிக்கப்பட்ட பலருக்கு மூச்சுதிணறல் ஏற்பட்டது. இதன்காரணமாக தமிழகம் முழுவதும் ஆக்சிஜன் தேவை அதிகரிக்க துவங்கியது. பலருக்கு ஆக்சிஜன் வசதி கிடைக்காத சூழல் ஏற்பட்டு அதனை சமாளிக்க தமிழக அரசு சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. அதன்காரணமாக அவசர தேவைக்காக ஆக்சிஜன் செறிவூட்டிகள் கொண்டு ஜீரோ டிலே அவசர சிகிச்சை பிரிவு உருவாக்கப்பட்டு மூச்சு திணறல் பாதிக்கப்படும் நோயாளிகளுக்கு உடனடியாக ஆக்சிஜன் கொடுக்கப்பட்டது.  அதன்தொடர்ச்சியாக தமிழக அரசு சார்பில் சென்னை மாநகராட்சி சார்பிலும் ஆக்சிஜன் செறிவூட்டிகள் சந்தை விலைக்கே பெறப்பட்டதோடு பல தொழிலதிபர்கள் தொண்டு நிறுவனங்கள் உள்ளிட்டோரும் ஆக்சிஜன் செறிவூட்டிகளை நன்கொடையாக வழங்கினர்.

மாநகராட்சி சார்பாக 2705 ஆக்சிஜன் செறிவூட்டிகள் சந்ைத விலைக்கும், சென்னையில் உள்ள சட்டமன்ற உறுப்பினர்கள் தொழில் நிறுவனங்கள், தன்னார்வலர்கள் மூலம் 2198 ஆக்சிஜன் செறிவூட்டிகள் நன்கொடையாகவும் பெறப்பட்டுள்ளன. சென்னையில் உள்ள மருத்துவமனைகள், கொரோனா சிறப்பு சிகிச்சை மையங்கள் உள்ளிட்ட மையங்களுடன் 2,990 ஆக்சிஜன் செறிவூட்டிகள் பயன்படுத்தப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாகவே மற்ற மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் பாதிப்பு அதிகமுள்ள மாவட்டங்களில் சென்னை மாநகராட்சி ஆக்சிஜன் செறிவூட்டிகளை வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. அதன்அடிப்படையில் கோவைக்கு 569 செறிவூட்டிகளும், ஈரோடு மாவட்டத்திற்கு 319 செறிவூட்டிகள் எனஇதுவரை 1633 ஆக்சிஜன் செறிவூட்டிகள் சென்னை மாநகராட்சி சார்பில் பிற மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

Related Stories:

>