தொழில் கல்வி சேர்க்கை என்ன தகுதி? ஆய்வு செய்ய ஆணையத்துக்கு முதல்வர் உத்தரவு

சென்னை: தமிழக மு.க.ஸ்டாலின் ஆணையிட்டுள்ளார். அந்த ஆணையில் கூறப்பட்டுள்ளதாவது: அரசுப் பள்ளிகளில் 2020-2021ம் கல்வி ஆண்டில் படித்த மாணவர்கள் மருத்துவப் படிப்பில்  சேர்வதற்கு 7.5 ச தவீதம் இடம் ஒதுக்கப்பட்டது. அதே போல பொறியியல், வேளாண்மை, கால்நடை, மீன் வளம், சட்டம் போன்ற தொழில் கல்விப் படிப்புகளில் கடந்த ஆண்டு மாணவர் சேர்க்கை விவரங்களின்படி, அரசுக்கல்லூரிகள், பல்கலைக் கழகங்கள் மற்றும் முன்னிலை வகிக்கும் சுயநிதிக் கல்லூரிகளில் மிகக் குறைந்த எண்ணிக்கையிலேயே அரசுப் பள்ளிகளில் படித்த மாணவர்கள் சேர்ந்துள்ளனர் என்று பல்வேறு  தரப்பில் இருந்து கோரிக்கைகள் அரசுக்கு வந்துள்ளது.

இந்த கோரிக்கைகளை தீவிரமாக ஆய்வு செய்து, அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் சமூகப் பொருளாதார நிலைகள் குறித்தும், கடந்த ஆண்டுகளில் அந்த மாணவர்களின் சேர்க்கைபல்வேறு தொழில் கல்வி நிறுவனங்களில் எப்படி உள்ளது என ஆய்வு செய்தும், அரசுப் பள்ளி மாணவர்களின் தொழில் கல்வி படிப்புகளில் குறைந்த அளவில் உள்ள நிலையே இருந்தால் அவற்றை சரி செய்திட எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து பரிந்துரை செய்ய ஓய்வு பெற்ற நீதிபதி முருகேசன் தலைமையில் ஒரு ஆணையம் அமைக்கப்படுகிறது. இந்த  ஆணையம் தனது அறிக்கையை ஒரு மாதத்துக்குள் அரசுக்கு அளிக்கும்.

Related Stories: